ஐரோப்பியா சொந்தமண்ணில் முதல் முறையாக செயற்கை கோள் ஏவி சாதனை

ஜெர்மனி:
ஜெர்மனியின் தனியார் விண்வெளி நிறுவனம் Isar Aerospace தனது Spectrum ரொக்கெட்டை நோர்வேயின்Andoya Spaceport-இல் இருந்து 2026 செப்டம்பர் 5 அன்று வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பியது.
இது ஐரோப்பிய நிலத்தில் இருந்து நடந்த முதல் CubeSats ஆகும். இதன் மூலம், ஐரோப்பா தனது செயற்கைக்கோள் ஏவுதல் திறனில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது.
இந்த ரொக்கெட், ஐந்துCubeSats மற்றும் ஒரு அறிவியல் பரிசோதனையை எடுத்துச் சென்றது. TU Berlin, University of Maribor, NTNU Norway போன்ற பல்கலைக்கழகங்கள் உருவாக்கிய செயற்கைக்கோள்கள் இதில் அடங்கும்.
2025-இல் நடந்த முதல் முயற்சி தோல்வியடைந்தது. புறப்பட்ட ஒரு நிமிடத்திற்குள் ரொக்கெட் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்தது. ஆனால், Isar Aerospace அந்த பிழைகளை சரிசெய்து, 2026-இல் இரண்டாவது முயற்சியில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியால், ஐரோப்பாSpaceX மற்றும் பிற வெளிநாட்டு நிறுவனங்களின் மீது வைத்திருந்த சார்பை குறைக்க முடியும். Isar Aerospace நிறுவனம், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான செயற்கைக்கோள்களை சுற்றுவட்ட பாதைக்கு அனுப்பும் திறனை பெற்றுள்ளது.
இதுபற்றி நிறுவனத்தின் CEO Daniel Metzler கூறியதாவது:

“விண்வெளிக்கு அணுகுதல் என்பது தேசிய பாதுகாப்புக்கும், தொழில்துறைக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்த வெற்றி, ஐரோப்பாவுக்கு தன்னாட்சி வழங்கும்” என்று தெரிவித்தார்.
இந்த முயற்சி, ஐரோப்பிய விண்வெளி துறைக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது. பிரித்தானியா, சுவீடன் போன்ற நாடுகளும் விரைவில் தங்கள் சொந்த spaceports-இல் இருந்து செயற்கைக்கோள் ஏவுதலை தொடங்க திட்டமிட்டுள்ளன.

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் மருத்துவ மாணவர்களுக்கான 19-வது ‘கல்பவிருக்ஷா’ பயிலரங்கம்

சென்னை:டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை குழுமம், தனது ஆராய்ச்சி மற்றும் கல்விப் பிரிவான

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் முதன்மை மொழி; பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை:தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மையான நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்க வேண்டுமென்றும், உயர்