சென்னை:
சென்னை தரமணி கல்குட்டை பாரதி நகரில் நேற்று இரவு 11.45 மணியளவில் போதையில் ஒரு நபர் சாலையோரம் காயங்களுடன் விழுந்து கிடப்பதாக வேளச்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த நபரை மீட்டு 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புரன்ஸ் ஊழியர்கள் காயமடைந்த அந்த நபருக்கு முதலுதவி செய்ய முயன்றனர். அப்போது அந்த நபர் தன்னிலை அறியாத அளவிற்கு போதையில் இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தனர். இங்கிருந்து அந்த நபரை அழைத்துச் செல்லுமாறு ஆம்புலன்ஸ் டிரைவர் மகேஷ், முதலுதவி சிகிச்சை அளிக்கும் ஊழியர் யுவராஷ் ஆகியோரை மிரட்டும் வகையில் போலீசார் தெரிவித்தனர்
இதனால் செய்வதறியாத ஊழியர்கள் அந்த நபரை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை நோக்கி வந்துகொண்டிருந்தனர். வேளச்சேரியில் உள்ள ஹாலிடேஸ் ஓட்டல் அருகே வாகனம் சென்று கொண்டிருந்தபோது உள்ளே திடீரென சத்தம் கேட்டதும் ஆம்புலன்ஸை டிரைவர் வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே எட்டிப் பார்த்தபோது அந்த போதை ஆசாமி, ஆம்புலன்ஸ் ஊழியர் யுவராஜை சரமாறியாக தாக்கி அவரது கழுத்தை ஸ்டெதஸ்கோப்பால் நெருக்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக ஆம்புலன்ஸ் டிரைவர் மகேஷ் இறங்கிவந்து போதை ஆசாமியிடமிருந்து யுவராஜை காப்பாற்ற முயன்றபோது கூர்மையான ஆயுதம் மூலம் டிரைவரையும் தாக்கியுள்ளார் அந்த போதை ஆசாமி.
இதில் மிரண்ட ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேளச்சேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த போதை ஆசாமியை கட்டுப்படுத்தி சைதாப்பேட்டை மருத்துவமனைக்கு அதிகாலை சுமார் 1.30 மணிக்கு கொண்டு வந்தனர்.
அங்கு போதை ஆசாமிக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ய முயன்றனர். அப்போது போதை உச்சத்தில் இருந்த அந்த போதை ஆசாமி மருத்துவரை தாக்க முயன்றார். தடுக்க வந்த செவிலியர்கள், ஊழியர்களையும் தாக்க முயன்றதால் மருத்துவமனையில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் பீதியடைந்த அரசு மருத்துவமனை பணியாளர்கள் சைதாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போதை ஆசாமியை கட்டுக்குள் கொண்டுவர செய்ய முயன்றபோது போலீசாரையும் தாக்க முயன்றார். இதனால் மருத்துவமனையில் கூடுதலாக பரபரப்பு தொற்றிக் கொண்டது.
பின்னர் தொடர்ந்து போலீசார் அந்த போதை ஆசாமியை கட்டுப்படுத்தியதையடுத்து முதலுதவி செய்யப்பட்டது. சற்று நிதானத்திற்கு வந்த அந்த போதை ஆசாமியிடம் விசாரித்தபோது, அவனது பெயர் ராமசாமி (வயது 53) என்பதும், சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் என்பதும், தற்போது சென்னை பல்லாவரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருவதும் தெரியவந்தது. மேலும் பல திடுக்கிடும் தககவல்களை போலீசாரிடம் அவர் தெரிவித்தார்.
அதில், ஒரு கும்பல் தனக்கு கஞ்சா, ஊக்கா, போதை மாத்தரை உள்ளிட்ட போதை வஸ்துக்களை விற்பனை செய்யும்படி மிரட்டியதாகவும், தான் முடியாது என்று கூறி மறுத்ததால், ஆத்திரமடைந்த அந்த கும்பல் தன் உடலில் போதையை செலுத்திவிட்டதாகவும் இனால் தனக்கு தன்னிலை மறக்கும் அளவிற்கு போதை ஏறியதாகவும் கூறினார். இதையடுத்து சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு அந்த போதை ஆசாமியை கீழ்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போதை ஆசாமி செய்த ரகளையால் ஆம்புலன்ஸ் கண்ணாடிகள் நொருக்கப்பட்டன. இருக்கைகள். ஆம்புன்சில் எப்போதும் வைக்கப்பட்டிருக்கும் விலை உயர்ந்த மருத்துவ உபகரணங்கள் சேதமடைந்தன. மேலும் ஊழியர்கள் தாக்கப்பட்டதால் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர்.
சைதாப்பேட்டை மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர்கள், தாக்கப்பட்டது, மருத்துவர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்பதை உணர்த்துகிறது. போதை வஸ்துக்களை ஒழிக்கப் பாடுகிறோம் என்று கூறும் தமிழக அரசு, சிறிய சிறிய போதை பொருட்களை வைத்திருப்பவர்களை கைது செய்துவிட்டு, பெரிய அளவில் கஞ்சா, அபின் உள்ளிட்ட விலை உயர்ந்த போதை பொருட்கள் கடத்துபவர்களை கண்டுபிடிக்க முயற்சிக்கவில்லையா என்கிற கேள்வி சமூக ஆர்வலர்கள், போதை ஒழிப்பு குழுவினர், பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. புதிய அரசு இந்த ஒரு சம்பவத்தை பெரிய விஷயமாக கருதி போதை பொருள் தடுப்பு குழுவின் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் ஆவலாக உள்ளது.

சென்னையில் ஆம்புலன்ஸ், மருத்துவ உபகரணங்களை சேதப்படுத்தி, ஊழியர்களை தாக்கிய போதை ஆசாமி; போலீசார், மருத்துவரை தாக்க முயற்சி
சென்னை:சென்னை தரமணி கல்குட்டை பாரதி நகரில் நேற்று இரவு 11.45 மணியளவில் போதையில்






