நாகை வேளாங்கண்ணி மாதா ஆலய கொடியேற்றம் திரளாளோர் பங்கேற்பு

நாகை:
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா, பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது கோலாகலமாகத் தொடங்கியது. இதற்கான கொடியேற்ற நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் காட்சிகள் காலை முதலே இணையத்தில் வைரலானது. ஆண்டு பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான இந்தக் கொடியேற்ற நிகழ்வு, பக்தர்களின் பக்திப் பரவசத்திற்கு மத்தியில் வெகு விமரிசையாக தொடங்கியது.
வேளாங்கண்ணி பேராலய வளாகம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருப்பதையும், பக்தர்களின் வருகை எந்த அளவுக்கு அதிகரித்துள்ளதையும் காண முடிந்தது. நேற்று மாலை சரியாக 6.45 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்தனர்.
சென்னை, காஞ்சிபுரம், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாதாவின் திருப்படங்களை ஏந்தியபடி பாதயாத்திரையாக வேளாங்கண்ணியை வந்தடைந்துள்ளனர். மேலும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் மாதாவை தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர். பேராலய முகப்பிலிருந்து திருக்கொடி ஊர்வலம் புறப்பட்டு கடற்கரைச் சாலை, ஆரியநாட்டு தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, மீண்டும் பேராலயத்தை வந்தடைந்தது.
அப்போது தஞ்சை மறைமாவட்ட ஆயர் திருக்கொடியை புனிதம் செய்து கொடியேற்றினார். இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காண லட்சக்கணக்கான மக்கள் கொடிமரத்தின் அருகே சூழ்ந்திருந்தனர். அன்னையின் திருவுருவம் பொறித்த கொடி ஏற்றப்படும் கண்கொள்ளாக் காட்சியைக் பக்தர்கள் ஆவலுடன் காத்திருந்து கண்டு ரசித்தனர். இந்த விழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் பெரிய தேர்பவனி செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த விழாவைக் காண பல லட்சக்கணக்கான பக்தர்கள் வந்துள்ளதால், மாவட்டம் முழுவதும், குறிப்பாக வேளாங்கண்ணியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் முதன்மை மொழி; பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை:தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மையான நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்க வேண்டுமென்றும், உயர்

புதிய அரசு பொறுப்பேறற 116 நாட்களில் 550 குற்றச் சம்பவங்கள்; குற்றவாளிகளாக நிற்கும் ஆளும் கட்சி நிர்வாகிகள் பட்டியலிட்ட உதயநிதி

சென்னை:சட்டபேரவையில் இன்று முதல்வர் விஜய் தலைமையில் கீழ் உள்ள காவல்துறை மானியக் கோரிக்கை

தமிழ்நாடு சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்க 30ம் தேதி கடைசிநாள்: சென்னை ஆட்சியர்

சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் நல்வழிகாட்டுதலின்படி சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஏற்றுமதியில் 2-வது இடம்: இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த காஞ்சிபுரம்!

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா தலைமையில் மாவட்ட