சென்னை:
திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையிலிருந்து, நீர் திறந்து விட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிற்கிணங்க, தற்போது, எல்.நினோ பாதிப்பினால் மழைப் பொழிவு இல்லாததால் அமராவதி ஆற்றில் செயல்படுத்தப்படும் குடிநீர்த் திட்டங்களுக்கு போதுமான நிலத்தடி நீர் உயர்வதற்கும், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட பொதுமக்களின் குடிநீர்த் தேவையினை பூர்த்தி செய்வதற்கும், திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையின் ஆற்று மதகு வழியாக 30.08.2026 (இன்று) முதல் 07.09.2026 வரை நாளொன்றுக்கு, வினாடிக்கு 1,000 கன அடி வீதம் 8 நாட்களுக்கும் போதிய மழைப்பொழிவு காரணமாக வரும் நாட்களில் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கும்பட்சத்தில், மேலும் 4 நாட்களுக்கு நாளொன்றுக்கு வினாடிக்கு 1,000 கன அடி வீதம், அமராவதி அணையின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பொறுத்து, அமராவதி அணையிலிருந்து, நீர் திறந்து விட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

சைதாப்பேட்டை ஜீனிஸ்சாலையில் வினைதீர்த்த விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்
சென்னை:சென்னை சைதாப்பேட்டை ஜீனிஸ் சாலையில் அரசு பொது மருத்துவமனை அருகே வினைதீர்த்த விநாயகர்






