சென்னை:
சென்னை சைதாப் பேட்டை ஜீனிஸ் சாலை யில் அரசு பொது மருத் துவமனை அருகே வினைதீர்த்த விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் கோலாகலமாக நடை பெற்றது. இதில் திர ளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சென்னை சைதாப் பேட்டை ஜீனிஸ் சாலை யில் எழுந்தருளி பக்தர் களுக்கு அருள்பாலித்து வரும் வினைதீர்த்த விநாயகர் ஆலயத்தில் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி பணிகள் நிறைவுற்ற நிலையில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக கடந்த 29ம் தேதி காலை 8 மணியளவில் அனு க்ஞை, கோ பூஜை, விக்னேஷ்வர பூஜை, புண்யாக வாசனம், கணபதி ஹோமம், மகாலஷ்மி ஹோமம், வாஸ்த்து சாந்தி, மிருத் சங்கிரஹணம், பரவேசபலி, யந்திர ஸ்தாபனம், விக்ரஹ ஸ்தாபனம், யஜமானார் காப்பு கட்டுதல் கடஸ் தாபணம், கும்ப அலங்காரம் நடை பெற்றது. மாலை 5 மணி யளவில் விசேஸந்தி, அங்குரார்பணம், வேத பாராயணம், விசேஷ திரவ்ய ஹோமம், அஸ்த்ர ஹோமம், ஸ்பர்ஷாஹுதி, பூர்ணாஹுதி, தீபாரா தனை, பிரசாதம் வழங்கல் நடைபெற்றது. இன்று காலை 7 மணியளவில் மங்கள இசை, பூதசுத்தி, வேத பாராயணம், சிறப்பு திவ்ய ஹோமமும், காலை 10.45 மணியளவில் பூர்ணாஹுதி, யாத்திரா தானம், கிரஹப்ரிதி, கடம் புறப்பாடு நடைபெற்றது.
இதனை தொடர்ந்து காலை 11 மணிக்கு விமான மகா கும்பாபிஷேம் நடைபெற்றது. 11.15 மணிக்கு வினைதீர்த்த விநாயகர்மூலவர் மகா கும்பாபிஷேகம் நடை பெற்றது. விழாவை முன்னிட்டு விநாய கருக்கு சிறப்பு அலங் காரம், தீபாராதனை நடை பெற்றது.
இதில் திரளான பக் தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இவர்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை பிடாரி ஸ்ரீ இளங்காளி அம்மன் கோவில் அறங் காவலர், ஆலய பூசாரி எல்.மோகன், பழக் கடை எம்.மனோகர், பி.டி.சி.குமார், சைதை சத்யா, ஏ.சுப்பிரமணி, கே.சுகு மார், எம்.புண் ணிய மூர்த்தி, இளை ஞரணியினர் எஸ்.அபி, எம்.சசிகுமார், எம்.கௌதம், எ.ராகுல், எஸ்.பிரசாந்த், எஸ். சூரியா, ஜெ.பிரகாஷ், ஜெ.பிரசாந்த், பப்லு சுபாஷ் உள்பட பலர் செய்திருந்தனர்.

பத்திரிகையாளர் இல்லத் திருமண விழா
பத்திரிகையாளரும் சமூக சேவகருமான எம்.ஜெயராஜ் இல்லத்திருமண விழாவில் மக்கள் ஆணையம் பத்திரிகை ஆசிரியர்






