நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் பர்சனல் லோன் என்கிற பெயரில் வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்களுக்கு சென்று ஒரு கும்பல் பர்சனல் லோன் தருவதாக ஆசை வார்த்தை கூறி அவர்களை நம்ப வைக்கின்றனர். பின்னர் விண்ணப்பதாரரின் ஆவணங்களை பெற்றுக் கொண்டு தங்கள் கும்பலை சேர்ந்த நபர்களின் கொடுகின்றன.
அவர்கள் லோன் வாங்க விண்ணப்பிக்கும் நபரின் வீட்டிற்கு நேரடியாக சென்று அவர் வீட்டை புகைப்படங்கள் எடுத்து தங்களுக்கு விரைவில் லோன் அப்ருவல் ஆகும் என்று நம்ப வைக்கின்றன. இதனையடுத்து உங்கள் லோன் கிடைக்க முன்பணமாக குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என்று கூறுகின்றனர். பெரிய தொகைதான்ன வரப்போகிறதே என்று நம்புபவர்கள் இவர்களிடம் பணத்தை கொடுக்கின்றனர். ஆனால் குறிப்பிட்ட பணத்தை பெற்றுக்கொள்ளும் கும்பல் அதன் பிறகு லோனுக்காக விண்ணப்பித்தவர்களை தொடர்பு கொள்வது கிடையாது. விண்ணப்பதாரர் தொடர்பு கொண்டாலும் நம்பர் உபயோகத்தில் இல்லை என்கிற வசனமே மிஞ்சுகிறது.
தன் வீட்டிற்கு வந்த நபர்களை தொடர்பு கொண்டால் எனக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. நான் வெறும் ஏஜெண்ட் மட்டும் தான். என்னை பகடைக் காயாக பயன்படுத்திவிட்டனர் என கூறிவிடுகிறார்கள்.
உண்மையில் இந்த கும்பல் எவ்வளவு அப்பாவிகளை ஏமாற்றியுள்ளது. இவர்கள் வீடு வீடாக செல்வது ஏன்? வேறு சமூக விரோதிகளுடன் தொடர்பு உள்ளதா? எனவும் காவல்துறை விசாரனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதில் பெரிய தொகை லோன் தருவதாக கூறி சமுதாயத்தில் முக்கியஸ்தர்களாக திகழ்பவர்களையும் ஏமாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய தலைமைச் செயலகத்துக்கு பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கர் நிலத்தை வழங்க வீட்டு வசதி வாரிய நிலம் தேர்வு?
சென்னை:முதல்வர் விஜய் அறிவித்த புதிய தலைமைச் செயலக வளாகம் அமைக்க சென்னை பட்டினப்பாக்கம்






