அமெரிக்காவில் 20 வயது இந்திய மாணவர் சித்தரவதை – போலிசார் மீட்பு

அமெரிக்காவில் எப்பொழுதும் இந்தியர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை அதிகரித்த வண்ணம் உள்ளது. அங்கு உள்ள ஒரு வீட்டில் 20 வயது இந்திய மாணவருக்கு அவரது உறவினர்கள் மூலமே கொடுமை நடந்துள்ளது.

அமெரிக்காவில் இயற்கை உபாதைக்கு கூட செல்ல முடியாமல் பல மாதங்களாக வீட்டில் அடைத்து சித்திரவதை செய்யப்பட்ட 20 வயது இந்திய மாணவரை போலீசார் மீட்டுள்ளனர். அந்த மாணவரை கொடூரமாக தாக்கி, மூன்று வீடுகளில் அவரை பணி செய்ய வேண்டும் என அவரது உறவினர் மற்றும் இருவர் அவரை வற்புறுத்திய நிலையில் அதிகாரிகள் அந்த இந்திய மாணவரை மீட்டனர்.

கடந்த புதன்கிழமை, செயின்ட் சார்லஸ் கவுண்டியில் உள்ள ஒரு கிராமப்புற நெடுஞ்சாலையில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் வெங்கடேஷ் ஆர் சத்தாரு, ஸ்ரவன் வர்மா பெனுமேட்சா மற்றும் நிகில் வர்மா பென்மட்சா ஆகியோரை கைது செய்தனர். இந்த சூழலில் நேற்று வியாழக்கிழமை அவர்கள் மீது மனித கடத்தல் மற்றும் தாக்குதல் உள்ளிட்ட குற்றங்கள் சுமத்தப்பட்டன என்று தகவல் வெளியாகியுள்ளது.

அந்த பகுதியில் வசித்து வந்த ஒரு நபர், அந்த இந்திய மாணவர் படும் வேதனைகளை கண்டு 911 என்ற அவசர எண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனை அடுத்து உடனடியாக அந்த இடத்திற்கு சென்ற போலீசார் மூவரை கைது செய்து, வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்த 20 வயது இந்திய மாணவரை மீட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட அந்த நபர் தற்போது பாதுகாப்பாக இருக்கிறார் என்றும் அதே நேரத்தில் அவருக்கு ஏற்பட்டுள்ள பல எலும்பு முறிவுகளுக்காக இப்பொது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் அவரது முழு உடலையும் ஆய்வு செய்து அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக வழக்கறிஞர் ஜோ மெக்கல்லோக் தெரிவித்தார்.

ஏழு மாதங்களுக்கும் மேலாக, அந்த மாணவர்கள் அந்த மாணவனை கட்டிடத்தின் ஒரு அடித்தளத்தில் பூட்டி வைத்து, குளியலறைக்கு கூட பயன்படுத்த அந்த மாணவனுக்கு அனுமதி தரவில்லை, சரியாக கட்டிமுடிக்கப்படாத தரையில் உறங்கும்படி அந்த மாணவனை கட்டாயப்படுத்தினர். மின்சார கம்பி, PVC குழாய், உலோகக் கம்பிகள், மரப் பலகைகள், குச்சிகள் மற்றும் ஒரு சலவை இயந்திரத்திற்கான நீர் விநியோகம் செய்யும் குழாய் ஆகியவற்றால் அந்த மாணவன் தாக்கப்பட்டார் என சொல்லப்படுகிறது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத