இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சில் முன்னேற்றம்: பியூஷ் கோயல்

பிரஸல்ஸ்: இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

பெல்ஜியம் தலைநகர் பிரஸல்சில் நடைபெற்ற இந்திய – ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பக் குழுமத்தின் முதலாவது கூட்டத்தில் கலந்துகொண்ட பியூஷ் கோயல், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், இந்த விவகாரத்தில் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப குழுமம் உதவிகரமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

கரியமில வாயு வெளியேற்ற கட்டுப்பாடு தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் முன்வைக்கும் கருத்துக்களை, தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கான தடைக்கல்லாகப் பார்க்கவில்லை என்றும், இந்த விவகாரம் ஒருங்கிணைந்த முயற்சி மூலம் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது குறித்த பிரச்சினைக்கு இந்தியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து தீர்வு காணும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பெரும்பாலான பொருட்கள், மூலப்பொருட்கள் ஆகியவற்றின் மீது இந்தியாவின் சுங்கவரி கட்டணங்கள் மிக அதிகமாக இருப்பதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை என தெரிவித்த பியூஷ் கோயல், உண்மையில் இந்தியாவின் சுங்கவரி கட்டணங்கள் மிகக் குறைவாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடைய உதவும் தொழில்நுட்பம் சார்ந்த பொருட்களுக்கான சுங்கவரி கட்டணங்கள் மிகவும் குறைவு என்று கூறிய அமைச்சர், உலக வர்த்தக அமைப்பால் ஒப்புக் கொள்ளப்பட்ட சுங்க கட்டண வரி விகிதங்களை விட இந்தியாவின் உண்மையான பயன்பாட்டு சுங்க கட்டண வரி விகிதங்கள் குறைவு என தெரிவித்தார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65