இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு புரட்சிகர மாற்றத்தை செய்து வருகிறது

இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு புரட்சிகர மாற்றத்தை செய்து வருகிறது
இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு சூழலை மேம்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக சென்ற ஆண்டு மத்திய அரசு செயற்கை நுண்ணறிவு இயக்கத்திற்காக ரூ.10,300 கோடி ஒதுக்கியது. இந்த ஒதுக்கீடு அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தத்துறையில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.செயற்கை நுண்ணறிவு இயக்கம் கல்வி, கலை, தொழில் நிறுவனங்கள் போன்றவற்றில் மகத்தான மாற்றங்களை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. இதன் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக இந்த இயக்கம் தொடங்கப்பட்ட 10 மாதங்களுக்குள் சுமார் 18,000 வரைகலை உருவாக்கப் பிரிவுகளில் உயர்தரமான கணினி வசதியை சம்பந்தப்பட்ட அமைச்சகம் பெற்றுள்ளது. இந்த வரைகலை உருவாக்கப்பிரிவு சந்தையைத் தொடங்குவதில் முன்னோடியாக உள்ளது என்பதுடன் இந்தப் பிரிவைத் தொடங்கிய முதலாவது அரசாகவும் மோடி அரசு விளங்குகிறது.
புத்தொழில் நிறுவனங்களும், ஆராய்ச்சியாளர்களும் கணினி பயன்பாட்டை அணுகும் வகையில் பொதுவான கணினி வசதியை அரசு விரைவில் தொடங்கவுள்ளது. இதனைப் பயன்படுத்த உலகளவில் ஒரு மணி நேரத்திற்கு மூன்று டாலர் வரை செலவாகும் நிலையில், மத்திய அரசு ஒரு மணி நேரத்திற்கு ஒரு டாலர் செலவில் சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு என்பது எளிய மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியுடன் உள்ள மோடி அரசு இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் செயற்கை நுண்ணறிவு சோதனைக் கூடங்களை அமைத்துள்ளது. இவை இந்த துறை குறித்த அடிப்படை கல்வியை அளிக்கும்.
மற்றத் துறைகளில் பாலினப் பாகுபாடு குறைக்கப்படுவது போலவே செயற்கை நுண்ணறிவு துறையிலும் பாலின பாகுபாட்டை குறைப்பதற்கான முன்முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான தரவரிசை மதிப்பெண்ணில் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவற்றை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னிலையில் உள்ளது. இதேப்போல் செயற்கை நுண்ணறிவு பற்றிய திறனை உள்வாங்குவதிலும் இந்தியா முன்னிலை வகிப்பதாக ஸ்டேன்ஃபோர்ட் ஏஐ குறியீடு 2024- அறிக்கை தெரிவிக்கிறது.
குரல் ஒலி அடிப்படையிலான அணுகல் உட்பட இந்திய மொழிகளில் இணையதளம் மற்றும் டிஜிட்டல் சேவைகளை எளிதாக்க, இந்தியாவின் செயற்கை நுண்ணறிவால் செயல்படுத்தப்படும் மொழியாக்கத் தளமான பாஷினி பயன்படுகிறது.
பொது மக்களுக்கு சேவை செய்வதிலும் செயற்கை நுண்ணறிவு ஈடுபடுத்தப்படுகிறது. இதற்காக புரட்சிகர மாற்றத்துடன் பாரத்ஜென் வடிவமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 2025-க்குள் இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு தொழில்துறை 28.8 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என்று வீபாக்ஸ் அமைப்பின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. 2016-க்கும், 2023-க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு திறன் பெற்றவர்கள் எண்ணிக்கை 14 மடங்கு அதிகரித்திருப்பது இதன் மீதான ஆர்வத்தையும், பயன்பாட்டையும் பிரதிபலிக்கிறது. சிங்கப்பூர், பின்லாந்து, அயர்லாந்து, கனடா ஆகியவற்றுடன் செயற்கை நுண்ணறிவு திறனில் அதிவேகமாக வளர்ச்சியடையும் ஐந்தாவது நாடாக இந்தியா திகழ்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.