சமூக ஆர்வலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரிக்கை….

திருப்பூர்
திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் வரி செலுத்த கூடுதலாக பணம் கேட்கும் அலுவலர்களிடம் கேள்வி கேட்கும் சமூக ஆர்வலர்கள் மீது பொய் வழக்கு போடுவதாக மிரட்டும் அலுவலர்கள் மீது சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சி 2 வது மண்டல அலுவலகத்திற்குட்பட்ட பகுதியிலுள்ள பொது மக்களிடம் வீட்டு வரி பெயர் மாற்ற செய்ய கூடுதலாக பணம் கேட்கின்றனர். ஏன் கூடுதலாக பணம் கொடுக்க வேண்டுமென கேட்டால் நீங்கள் கேள்வி கேட்க யார் என அங்குள்ள அலுவலர்கள் மிரட்டி உங்கள் மீது எங்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார் அளிக்கப்படும் என மிரட்டி சமூக ஆர்வலர்களையும், பொது மக்களையும் அச்சுறுத்தி வருவது தொடர்பாக உரிய சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுவது சம்பந்தமாக
அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பு பொது செயலாளர் சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் தமிழ்நாடு முதலமைச்சர், மாவட்ட ஆட்சித்தலைவர், மாநகராட்சி ஆணையாளர், மாநகர மேயர், மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோர்களுக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது….
திருப்பூர் பகுதிகளிலுள்ள பொது மக்களுக்களுடைய குடிநீர், மின்சாரம், சாலை போக்குவரத்து போன்ற அத்தியாவசிய பிரச்சனைகள் தொடர்பாக சமூக ஆர்வலர்களாகிய நாங்கள் அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று தீர்வுகண்டு பொது மக்களுக்கு சேவை செய்வதால் எங்களுடைய உயிருக்கு உரிய பாதுகாப்பு இல்லை.
சமூகத்தில் பொது மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பாக புகார் தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்களின் பாதுகாப்பை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் திருப்பூரிலுள்ள பொது மக்களுக்கு ஏற்படும் மாநாகராட்சி ,குடிநீர், மின்சாரம், சாலை வசதி, போன்ற பொது பிரச்சனைகள் தொடர்பாக சமூக ஆர்வலர்களாகிய நானும் என்னை சார்ந்தவர்களும் இப்பிரச்சினைகள் முதலமைச்சர், மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்டோர்கள் கவனத்துக்கு எடுத்து உரிய தீர்வுகாணப்பட்டு பொது மக்களுக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி சேவை செய்து வருகின்றோம்.
திருப்பூர் 2 மண்டலம் 7 வது வார்டில் வீட்டு வரி பெயர் மாற்ற வேண்டி இணையதளம் மூலமாக விண்ணப்பித்து இரண்டு மாதங்களாகின்றதுஇது தொடர்பாக பல முறை புகார் அளிக்கப்பட்டும் எவ்வித முறையான உரிய தீர்வுகாண வில்லை சம்பந்தப்பட்ட நபர் நேரிடையாக சென்று கேட்டால் கூடுதலாக பணம் கேட்டனர் என்பதால் இது தொட‌ர்பாக ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகரம் 8 வது வார்டு கங்காநகர் பகுதிகளிலுள்ள ராக்கியாண்ணன் பெயரில் இருந்து அவரது மகன் மருமகள் தர்மராஜ், மஞ்சுளா ஆகியோர்கள் பெயரில் வீட்டு வரி மாற்றம் செய்ய வேண்டுமென பத்திரம், பட்டா, வில்லங்க சான்றிதல் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் நேரிடையாக இரண்டாவது மண்டல அலுவலகத்தில் கடந்த ஆறு மதங்களுக்கு முன்னதாக விண்ணப்பித்து கட்டணம் செலுத்திய நிலையில் தற்போது வரை பெயர் செய்யப்பட்ட பெயர் மாற்ற சான்றிதல் வழங்க வில்லை.
சம்பந்தப்பட்ட நபரிடம் திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டல அலுவலகத்திலுள்ள பில் போடும் நபர் செல் 9789507384 என்ற எண்ணியிருந்து சம்பந்தப்பட்ட கங்கா நகர் தர்மராஜ் என்பவரை அழைத்து நான்கு ஆயிரம் பணம் கொடுத்தால் உடனடியாக பெயர் மாற்ற உத்தரவு வழங்கப்படும் என கூறியுள்ளனர். ஆனால் சம்பந்தப்பட்ட கங்காநகர் தர்மராஜ் மிக ஏழ்மையான கூலி தொழிலாளர் என்பதால் பணம் கொடுக்க வசதி இல்லை என்பதால் கடந்த பத்து நாட்களாக மண்டல அலுவலகத்திற்கு நடையாய் நடந்து உள்ளனர் ஆனால் எவ்வித முறையான நடவடிக்கை எடுக்க வில்லை. இது தொடர்பாக எங்களுடைய அமைப்பிற்கு சம்பந்தப்பட்ட நபர் தகவல் அளித்தார்.
இந்நிலையில் இது தொட‌ர்பாக சம்பந்தப்பட்ட தர்மராஜ் தகவல் தெரிவித்த பிறகு நேரிடையாக 2 வது மண்டல அலுவலகத்திற்கு சென்று இது தொட‌ர்பாக கேட்டபோது சம்பந்தப்பட்ட பணம் கேட்ட நபர் இல்லை அவரது தனிப்பட்ட உதவியாளர் தனஜெயன் என்பரை நேரிடையாக சந்தித்து கேட்ட போது சார் லீவு ஐந்து நாட்கள் கழித்து வாருங்கள் என தெரிவித்தார்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையரிடம் புகார் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மண்டல அலுவலகத்திலுள்ள கண்காணிப்பாளர் அவர்களை நேரடியாக சந்தித்து பெயர் மாற்றம் தொடர்பாக கேட்க சொல்லியதை தொடர்ச்சியாக கேட்டபோது திங்கள்கிழமை வர சொன்னார் பிறகு ஆறு மாதங்களாக கால தாமதம் ஏற்பட்டுள்ளது என கேட்ட பிறகு கணினியில் இருந்து பெயர் மாற்ற உத்தரவு எடுத்து தரப்படும் என தெரிவித்தார்.
அப்போது சம்பந்தப்பட்ட கணினியில் உள்ள அலுவலரிடம் சென்று பெயர் மாற்ற சான்றிதல் பிரிண்ட் அவுட் எடுத்து கொண்டிருந்த போது விஜயராகன் என்ற அலுவலர் அங்கு வந்து இனிமேல் பெயர் மாற்ற விண்ணப்பம் எவர், யார் அளித்தாலும் வாங்காதே பல மடங்கு வரி அதிகப்படியான பிறகு தான் விண்ணப்பம் வாங்க வேண்டுமென கூறினார் அப்போது அவரிடம் சார் நாங்கள் பெயர் மாற்றம் விண்ணப்பித்து ஆறு மாதங்களாகின்றது ஆனால் கூடுதலாக பணம் தற்போது வரை பெயர் மாற்ற செய்ய வில்லை மேலும் பெயர் மாற்றம் செய்யப்பட்ட சான்றிதல் வழங்க வில்லை இந்நிலையில் நீங்கள் இப்படி பேசுவது தவறானதாகும் என தெரிவித்த போது நீங்கள் யார் கூடுதலாக பணம் கேட்டதை பத்தி கேட்க இங்கு எதுவும் பேசக்கூடாது இங்கு யாரவது பேசினால் அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார் அளிக்கப்படும் என மிரட்டினார்.

இதன் காரணமாக மண்டல அலுவலகத்திற்கு வந்திருந்த பலர் இது தொட‌ர்பாக சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கேள்வி கேட்டனர் அப்போது சம்பந்தப்பட்ட அலுவலர் உங்கள் அனைவர் மீதும் அலுவலர்களை பணிகள் செய்ய விடாமல் தடுத்ததாக புகார் அளிக்கப்படும் என தெரிவித்தார்.
எனவே வீட்டு பெயர் மாற்றம் செய்ய கூடுதலாக பணம் கேட்டு காலதாமதம் செய்து வந்தது தொடர்பாக நியாயம் கேட்க சென்ற சமூக ஆர்வலர்களையும் , பொது மக்களையும் மிரட்டி அச்சுறுத்தி வருவது தொடர்பாக சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பொது மக்களுக்களுடைய பொது பிரச்சனைகளுக்காக சமூகத்தில் பணியாற்றி வரும் சமூக ஆர்வலர்களாகிய எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க போர்க்கால அடிப்படையில் விரைவாக தீர்வுகாண வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube
thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய

சமூக ஆர்வலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரிக்கை….

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய