சென்னையில் தொடர்ந்து 2-வது நாளாக பெய்த மழை !

சென்னை, நேற்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சில இடங்களில் லேசான தூறல் இருந்தது. மாலையில் கருமேகம் சூழ்ந்து மழை பெய்யத்தொடங்கியது. வேப்பேரி, எழும்பூர், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, தியாகராயநகர், புரசைவாக்கம், கோடம்பாக்கம் உள்பட பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் வழக்கம்போல் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக பிரதான சாலைகளில் வாகனங்கள் இயல்பை விடவும் மெதுவாகவே நகர்ந்து சென்றதையும் காணமுடிந்தது. தமிழகம், புதுச்சேரியில் வருகிற 30-ந் தேதி வரையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகள், ஆந்திர கடலோர பகுதிகள், மத்திய மேற்கு வங்க கடல், லட்சத்தீவு பகுதிகள், கேரள-கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று பலமாக வீசும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சென்னையை பொறுத்தமட்டில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு இன்று வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 8.30 மணியோடு நிறைவடைந்த கடந்த 24 மணி நேர நிலவரப்படி வால்பாறை, சின்னகல்லாறில் தலா 11 செ.மீ. மழை அதிகபட்சமாக பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக அவலாஞ்சியில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட