சென்னையில் நாளை மறுநாள் ஜோசப் விஜய்- டி.கே.சிவகுமார் சந்திப்பு: காவிரி நதிநீர் பிரச்சினை குறித்து பேச்சு

சென்னை:
சென்னையில் நாளை மறுநாள் (20-ந் தேதி) தமிழக முதல்வtர் ஜோசப் விஜய் &- கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் சந்தித்து பேச இருக்கின்றனர். அப்போது, காவிரி நதிநீர், மேகதாது பிரச்சினை குறித்து பேச்சு வார்த்தை நடைபெற இருக்கிறது.
தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு, ஆகஸ்டு 19 (நாளை) மற்றும் 20-ந் தேதிகளில் சென்னையை அடுத்த கோவளத்தில் நடைபெற இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்க உள்ளார்.
இந்த மாநாட்டில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதல்-வர் என்.ரங்கசாமி ஆகியோர் கலந்துகொள்ள இருக்கின்றனர். கூட்டத்தில், தென் மாநிலங்களைச் சேர்ந்த முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
தற்போது, தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. என்றாலும், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
இதேபோல், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், கேரளம் முதல்-வர் வி.டி.சதீசன், தெலுங்கானா முதல்-வர் ரேவந்த் ரெட்டி, புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
இந்த மாநாட்டில், தென் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு, எல்லை பிரச்சினைகள், சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் வரும் 20-ந் தேதி (நாளை மறுநாள்) மாலை சந்தித்து பேச இருக்கின்றனர். இந்த சந்திப்பின்போது, காவிரி நீர் பிரச்சினை, மேகதாது அணை கட்டும் விவகாரம் குறித்து பேசப்பட இருக்கிறது.
ஏற்கனவே, கடந்த 3-ந் தேதி பெங்களூருவில் தமிழ்நாடு, கர்நாடக முதல்-வர்கள் சந்தித்து பேச இருந்தனர். ஆனால், அங்கு போராட்டம் வெடித்ததால், எனவே கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், விஜய் இப்போது பெங்களூரு வரவேண்டாம். சந்திப்பை இன்னொரு நாள் வைத்துக்கொள்வோம் என்று கூறிவிட்டார்.
இந்த நிலையில்தான், வரும் 20-ந் தேதி (நாளை மறுநாள்) தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் – கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் சந்தித்து பேச இருக்கின்றனர். இந்த சந்திப்பில், முக்கிய முடிவுகள் எட்டப்படும் என்று தெரிகிறது. மேலும் தற்போது பெரும் பரபரப்பாக பேசப்படும் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் குறித்தும் பேசப்படும் என்று தெரிகிறது.

வேளாங்கண்ணி மாதா ஆலய ஆண்டு திருவிழா: சைதை பாதயாத்திரை குழுவினர் சமபந்தி விருந்து

சைதாப்பேட்டை:நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் உலகப் புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம்

தவெக ஆட்சியில் 6 காவல் மரணங்கள்; இனியும் நடக்காமல் அரகூ தடுக்க வேண்டும்; அன்புமணி

சென்னை:பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை சிந்தாமணி காவல் நிலையத்துக்கு

டெண்டருக்கு முன்பே முதலமைச்சருக்கான புதிய அறை பணிகள் தொடங்கியது எப்படி?: – டி.டி.வி. தினகரன் கேள்வி

சென்னை:தலைமைச் செயலகத்தில் முதலமைச்சருக்கான புதிய அறையை தயார் செய்வதற்கான டெண்டர் அறிவிக்கும் முன்னரே

கர்நாடக நிர்வாகத்தில் தமிழகம் தலையிடக்கூடாது: முதல்வர் டி.கே.சிவகுமார்

பெங்களூரு:கர்நாடக மாநிலம் சாம்​ராஜநகர் மாவட்​டம் ஹனூர் அரு​கே​யுள்ள காவிரி வனவிலங்கு சரணாலய பகு​தி​யில்

செய்தியாளர்களை தாக்கிய தவெக எம்எல்ஏ கபில் மீது 21 நாட்களுக்குப் பிறகு வழக்குப்பதிவு

ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் யூடியூபர் மற்றும் செய்தியாளர்களைத் தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில்,