கர்நாடக நிர்வாகத்தில் தமிழகம் தலையிடக்கூடாது: முதல்வர் டி.கே.சிவகுமார்

பெங்களூரு:
கர்நாடக மாநிலம் சாம்​ராஜநகர் மாவட்​டம் ஹனூர் அரு​கே​யுள்ள காவிரி வனவிலங்கு சரணாலய பகு​தி​யில் கடந்த 15-ம் தேதி அதிகாலை​யில் மானை வேட்​டையாடியதாக அந்தோணி​சாமி (50), ஜான்​ரோஸ் பீட்​டர் (42), லாசர் குமார் (33) ஆகிய மூவரும் அம்​மாநில வனத்​துறை​யின​ரால் சுட்​டுக் கொல்​லப்​பட்​டனர். இந்த சம்பவம் அங்கு ​​பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யதை தொடர்ந்​து, வனத்​துறை அலு​வல​கங்​கள் சூறை​யாடப்​பட்​டன. கர்​நாடக வனப்​பகு​தி​யில் சுட்​டுக்​கொல்​லப்​பட்ட‌ 3 தமிழர்​களின் உடல்​களும் இறுதி திருப்​பலிக்கு பின்​னர், அவர்​களின் சொந்த கிராமங்​களில் அடக்​கம் செய்​யப்​பட்​டன.
இந்த சம்பவம் குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு, கர்நாடக அரசிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்றும், இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப் பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரிடம், கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து தமிழக தலைவர்கள் வெளியிட்ட கருத்துகள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர், ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தில் மற்றொரு மாநிலம் தலையிடக் கூடாது. ஓ.பன்னீர்செல்வம் அல்லது வேறு யாராக இருந்தாலும் இந்த அடிப்படைப் புரிதலைக் கொண்டிருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள சட்டம் -ஒழுங்கு விவகாரங்களில் என்னால் தலையிட முடியாது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதற்கே உரிய பிரச்சினைகள் உள்ளன. நமது மாநிலத்தை எப்படிக் காப்பது என்பது நமக்குத் தெரியும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அவர்கள் தங்கள் பணியைச் செய்யட்டும், நாம் நமது பணியைச் செய்வோம். அவர்களின் நிர்வாகத்தில் தலையிட நான் விரும்பவில்லை. நமது மாநிலத்தின் கண்ணியத்தைக் காக்க வேண்டியது அவசியம். அவர்கள் தங்கள் பணியைச் செய்ய வேண்டும்; நாம் நமது பணியைச் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.