ஜூலை 20-ல் திமுக அரசுக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம்…

சென்னை: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும், அனைத்துத் துறைகளிலும் ஊழல் அதிகரித்துள்ளதை கண்டித்தும், அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் இம்மாதம் 20-ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த இரண்டாண்டு காலத்தில். மக்கள் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், பீன்ஸ், அவரைக்காய், கேரட் உள்ளிட்ட காய்கறிகளின் விலைகளும்; துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, புளி, சீரகம் உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலைகளும் தற்போது கடுமையாக உயர்ந்துள்ளது.

கழக ஆட்சிக் காலங்களின்போது, இயற்கை இடர்ப்பாடுகளாலும், இன்னும் சில காரணங்களாலும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு ஏற்படும் நேரங்களில், அதிமுக அரசு தனிக் கவனம் செலுத்தி, அதற்கு ஏற்ற நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அண்டை மாநிலங்களில் இருந்து காய்கறி உள்ளிட்ட மளிகைப் பொருட்களை கொள்முதல் செய்து நியாய விலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு பண்டகசாலைகள் மூலமாக மக்களின் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி செய்யப்பட்டதுடன், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைத்தது அதிமுக அரசு என்பதை இந்த நேரத்தில், நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அதே போல், அறிவிக்கப்படாத மின்வெட்டால் சிறு, குறு தொழில் முனைவோர் செய்வதறியாது கலங்கி நின்ற நேரத்தில், மூன்று மடங்கிற்கும் மேலான மின்கட்டண உயர்வு என்ற பேரிடியை இறக்கியது இந்த திமுக அரசு. கழக அரசு கொடுத்து வரும் இலவச மின்சாரத்தையும் தடுப்பதற்கான முயற்சிகள்; அதைத் தொடர்ந்து சொத்து வரி, வீட்டு வரி 100 சதவீதம், கடை வரி 150 சதவீதம் வரை உயர்வு – இதன் காரணமாக வீட்டு வாடகை உயர்வு; பால் மற்றும் பால் பொருட்களின் விலை உயர்வு; கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு; வெளியூர் செல்லும் பேருந்துகளின் கட்டணம் வானளாவ உயர அனுமதித்தது இந்த அரசு.

இது போதாதென்று, இந்த அரசு, பத்திரப் பதிவுத் துறையில், மக்கள் தங்கள் சொத்துக்களை சந்ததியினருக்கு பெயர் மாற்றம் செய்தல், குடியிருப்பதற்கு மனை வாங்குதல், சொத்துக்களை அடமானம் வைத்து கடன் பெறுதல் உள்ளிட்ட பதிவுகளுக்கு பல மடங்கு கட்டணங்களை உயர்த்தியுள்ளது.

இந்த அரசின் ஆட்சிக் காலத்தில், அனைத்துத் துறைகளும் ஊழல்மயப்படுத்தப்பட்டு நாட்டின் ஜனநாயகம் கேலிப் பொருளாக்கப்பட்டு மக்கள் வாழ்வு சீரழிக்கப்படுகிறது. மின்சாரத் துறை, டாஸ்மாக், பத்திரப் பதிவுத் துறை என தொடங்கி, சகல துறைகளிலும் ஊழல் பெருகியுள்ளது.

நாட்டில் அனுமதியின்றி நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பார்கள் இயங்குகிறது என்று நான் குற்றச்சாட்டு வைத்து, கழகம் போராடிய நிலையில் அங்கொன்றும், இங்கொன்றுமாக பார்களுக்கு சீல் வைத்தது திமுக அரசு.

தமிகத்தில் இவ்வளவு அவலங்கள், வன்முறைகள், விலைவாசி உயர்வு, பல்வேறு துறைகளில் ஊழல் ஆகிய எதையும் கண்டுகொள்ளாமல். எதற்கெடுத்தாலும் மத்திய அரசு மீது பழிபோட்டு தப்பிக்கப் பார்க்கிறார். முதல்வரின் இத்தகைய செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்நிலையில், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய இந்த அரசைக் கண்டித்தும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், 20.07.2023 – வியாழக்கிழமை காலை 10 மணியளவில், வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், திமுக அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், பொதுமக்கள் கலந்துகொண்டு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65