தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார். இந்த விவகாரத்தில் தொடக்கம் முதலே அரசு அலட்சியம் காட்டியது ஏன் என்றும், நியாயம் நம் பக்கம் இருந்தும் மூத்த வழக்கறிஞர்களைத் தீவிரமாக ஆஜர்படுத்தாமல் ‘சரண்டர்’ ஆனதன் பின்னணி என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அகில இந்திய அளவிலான கலந்தாய்வின் இரண்டாவது சுற்றுக்கு முன்பாகவே, அவசரகதியில் மாநிலக் கலந்தாய்வை நடத்தி 151 இடங்கள் காலியாக இருப்பதாக அறிவித்தது திட்டமிட்டுச் செய்யப்பட்டதா எனக் கேட்டுள்ள அவர், தமிழகத்தின் மருத்துவ இடங்கள் அகில இந்தியத் தொகுப்புக்கு மாறுவதைத் தடுக்கச் சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் ஏன் நிறைவேற்றப்படவில்லை என்றும் வினவியுள்ளார். இதோடு, பிறப்பிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 100:இனிய உளவாக இன்னாத கூறல்கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. விளக்கம் சுவையான கனி






