சென்னை:
சென்னை திருவொற்றியூர் வசந்தம் நகரை சார்ந்த தனுஷ் அங்குள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வரும் நிலையில், சில தினங்களுக்கு முன்பாக கும்பலாக தாக்கியுள்ளனர். இதில் அந்த மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். கோவை மாணவர் அமுதன் கொலை சம்பவம் போல் இந்த சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மாணவர் தனுஷின் பெற்றோருக்கு ஆறுதல் சொல்வதற்காக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோன் ஆகிய இருவரும் திருவொற்றியூர் சென்றனர்.
அப்போது அவர்கள் இருவரையும் முற்றுகையிட்ட மாணவனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள். ஒவ்வொரு பள்ளிக்கூடங்களிலும் 100 சிசிடிவி கேமராக்களை போடுங்க. போலீஸ் போடுங்க. கவர்மெண்ட் என்னதான் பண்றாங்க. இங்க என்ன நடக்குதுன்னு ஒன்றுமே புரியலை. 3 நாட்களாக வராமல் இன்று எதற்கு வந்தீர்கள் என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினர்.
இவர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் எந்த பதிலும் அளிக்காமல் அவர்கள் வந்த காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
அப்பகுதியை சார்ந்தவர்கள் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், சிசிடிவி கேமரா ஒரு இடத்திலும் கிடையாது. அரச என்ன தான் செய்கிறது என்றே தெரியவில்லை. பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவே பயமாக உள்ளது. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.
இதற்கிடையில் ஆறுதல் கூற வந்த அமைச்சர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ள சம்பவம் பரபரப்பினை கிளப்பியுள்ளது

ரூ.1லட்சம் வரை பயிர்க்கடன் பெற்றிருந்தாலும் ரூ.75 ஆயிரம் வரை தள்ளுபடி: முதல்வர்
சென்னை:தமிழக சட்டசபையில் முதல் அமைச்சர் விஜய் விதி எண் 110 -கீழ் விவசாயிகளுக்கான






