பாஜக ஆளும் மாநிலங்கள் எல்லாம் உத்தமமாக உள்ளதா ? கே.எஸ்.அழகிரி காட்டம்…

தமிழக முதல்வர் பெங்களூர் சென்றுள்ளார் என்பதற்காக பாஜக பயந்து நடுங்குகிறது. அவர் எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்க்கிறார், என்ற ஒரே காரணத்திற்காக தமிழக அரசு மீது வீண் குற்றம் சாட்டுகிறார்கள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் உள்ள புவனகிரியில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “ பொன்முடி அமைச்சர் அவர்களது வீட்டில் சோதனை நடைபெறுகிறது, இது எதிர்பார்த்ததுதான். தமிழக முதல்வரும் எதிர்பார்த்ததுதான். 2012 ம் ஆண்டில் 10 லாரிகள் அதிகமாக செம்மண் கடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 11 ஆண்டுகள் கழித்து தற்பொழுது சோதனை நடைபெற்று வருகிறது. ஒரு ஊராட்சி ஒன்றியம் செய்கின்ற வேலையை மத்திய அரசு செய்கிறது.

மத்திய அரசுக்கு என்ன அதிகாரம் இருக்கிறதோ, அதே அதிகாரம் மாநில அரசுக்கும் இருக்கிறது. இதை மாநில அரசு மறந்துவிட வேண்டாம். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்களது போலீஸ் கமிஷனரை சிபிஐ விசாரித்தது. உடனே மத்திய அரசுக்கே தெரியாமல் உடனடியாக மேற்கு வங்க போலீசை அனுப்பி 80 சிபிஐ அதிகாரிகளை கைது செய்து அழைத்து வந்தது. அவர்களுக்கும் அதிகாரம் உள்ளது என்பது அப்பொழுதுதான் தெரிந்தது. மாநில அரசுக்கும் இப்படிப்பட்ட அதிகாரம் உள்ளது என்பதை அப்போதுதான் புரிந்து கொண்டார்கள்.

பாரதிய ஜனதா ஆளுகின்ற மாநிலங்கள் எல்லாம் உத்தமர்களா. ஏன் அங்கெல்லாம் சோதனை நடைபெறவில்லை. அங்கே செல்ல வழி தெரியவில்லையா. அதேபோல் உங்கள் தோழமைக் கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களில் எல்லாம் ஏன் இதுவரை சோதனை நடைபெறவில்லை. தமிழ்நாட்டில் முன்பு இருந்த உங்கள் தோழமைக் கட்சி வீடுகளிலெல்லாம் ஏன் சோதனை நடைபெறவில்லை.

தமிழக முதல்வர் பெங்களூர் சென்றுள்ளார் என்பதற்காக ஏன் பயந்து நடுங்குகிறீர்கள். அவர் எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்க்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக தமிழக அரசு மீது குற்றம் சாட்டுகிறீர்கள். தமிழக அமைச்சர் மீது உள்ள குற்றச்சாட்டு, செம்மண் திருடி விட்டார் என்பது. இதற்கு கனிமவளத்துறை அதிகாரிகளை விசாரணை செய்து விட்டு செல்லலாமே. இதை காங்கிரஸ் கட்சி மிகவும் வன்மையாக கண்டிக்கிறது. இதை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்ற மாட்டார்கள்.

எல்லோரையும் பயமுறுத்த வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. ஒரு தனியார் தொலைக்காட்சி இந்தியா முழுவதும் தன்னிச்சையாக வாக்கெடுப்பு நடத்தியதில் தென் மாநிலங்கள் முழுவதும் எழுவது சதவீதம் பாரதிய ஜனதாவை எதிர்க்கிறார்கள். 30 சதவீதத்துக்குக் கீழ் தான் பாரதிய ஜனதாவை ஆதரிக்கிறார்கள் என்று கூறியுள்ளது. இந்த நிறுவனம் ஒரு காலத்தில் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக கணக்கெடுப்பு நடத்தியது. தற்பொழுது நிலைமை மாறி உள்ளது. மத்தியில் ஆளும் 33 அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு உள்ளது. ஏன் அவர்கள் வீட்டுக்கு அமலாக்கத்துறை செல்லவில்லை. அவர்கள் என்ன உத்தமர்களா. இந்திய விளையாட்டு வீரர்கள் 40 பேர் ரோட்டில் நின்று பாலியல் தொல்லை தந்ததாக ஒரு எம் பி யின் மீது குற்றச்சாட்டுகிறார்கள். ஆனால் அந்த எம்பி இதுவரை கைது செய்யப்படவில்லை. அவர் நாடாளுமன்றத்திற்கு சர்வ சாதாரணமாக வந்து செல்கிறார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு இருக்கிற பாதுகாப்பு கூட, ஒரு மாநில அமைச்சருக்கு கிடையாதா?.

பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை சென்றாலும் சரிதான், அவர் உருண்டு புரண்டாலும் சரிதான். அவர் எந்த ஊழல் குற்றச்சாட்டு கூறினாலும் சரிதான். எங்களுக்கு ஒன்றும் கவலை இல்லை. மக்கள் அதை மதிக்க மாட்டார்கள். தமிழக ஆளுநர் தேவையில்லாமல் தமிழக அரசில் சர்ச்சைக்குரிய வார்த்தைகளை உபயோகம் செய்கிறார். இவர் மூன்று முறை தமிழக அரசை எதிர்த்துப் பார்த்தார், ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம் ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது என்று அவருக்கே தெரியும். எத்தனையோ ஆளுநர்கள் தமிழ்நாட்டில் இருந்து உள்ளார்கள். தமிழ்நாட்டில் இந்த ஆளுநர் ஏதோ கோபத்தில் உளறிக் கொண்டு உள்ளார்” என்றார் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத