பிரதமருக்கு மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை – அமைதியில் அக்கறை இருந்தால் மணிப்பூர் முதல்வரை நீக்கயிருக்க வேண்டும்…..

மணிப்பூரில் கடந்த மாதம் 3-ந் தேதி ‘மெய்தி’ பெரும்பான்மையின மக்களுக்கும், பழங்குடியினருக்கும் இடையே கலவரம் வெடித்தது. 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இன்னும் கலவரம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், இப்பிரச்சினை குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது :- , மணிப்பூர் நிலவரம் குறித்து பிரதமர் மோடியுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 55 நாட்களாக, மணிப்பூர் பற்றி மோடி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. அவர் பேசுவதை கேட்க ஒவ்வொரு இந்தியனும் காத்துக்கொண்டிருக்கிறான். மணிப்பூர் மீது பிரதமர் மோடிக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், முதல் வேலையாக, மணிப்பூர் முதல்வர் பிரேன்சிங்கை அவர் நீக்க வேண்டும். மணிப்பூர் கலவர பிரச்சினையில், பா.ஜனதாவின் எத்தகைய பிரசாரமும் அதன் தோல்வியை மூடி மறைக்க முடியாது.

பயங்கரவாதிகள் மற்றும் சமூக விரோதிகளிடம் இருந்து திருடப்பட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்ய வேண்டும். அனைத்து தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி, பொதுவான அரசியல் வழிமுறை காண வேண்டும்.

பாதுகாப்பு படையினரின் உதவியுடன் சாலை அடைப்பை நீக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலையை திறந்து, அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கச் செய்ய வேண்டும். மறுவாழ்வுக்கான புதிய திட்டம் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதற்கிடையே, மணிப்பூரில் 12 பதுங்கு குழிகளை பாதுகாப்பு படையினர் அழித்தனர். தமன்லாங், இம்பால் கிழக்கு, பிஷ்னுபூர், கங்க்போக்பி, காக்சிங், சுரசந்த்பூர் ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின்போது அவை அழிக்கப்பட்டன. இந்த வேட்டையில், 51 எம்எம், 84 எம்எம் ரக பீரங்கி குண்டுகள் ஒரு நெல் வயலில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு வெடிகுண்டும் சிக்கியது. அவற்றை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்க செய்தனர். இதுவரை 1,100 ஆயுதங்கள், 13 ஆயிரத்து 702 வெடிபொருட்கள், 250 வெடிகுண்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கை மீறியதாக இருவரை 135 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65