பேராசிரியர் அன்பழகனுக்கு 8 அடி உயர வெண்கல சிலை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை:
சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் தமிழக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் அன்பழகனின் சிலையை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில், “இனமான பேராசிரியர்‌ என்று முத்தமிழறிஞர்‌ கலைஞரால் பெருமிதத்தோடும்‌ பேரறிஞர்‌ அண்ணாவால் “பேராசிரியர்‌ தம்பி” என்று அன்போடும்‌ அழைத்துப்‌ போற்றப்பட்டவர்‌ பேராசிரியர்‌ க.அன்பழகன்‌.
பேராசிரியர்‌ க.அன்பழகன்,‌ திருவாரூர்‌ மாவட்டம்‌, காட்டூர்‌ கிராமத்தில்‌ 19.12.1922 அன்று பிறந்தார்‌. படிக்கின்ற காலத்தில்‌ தந்தை பெரியாரின்‌ சமூக சீர்திருத்தக்‌ கொள்கைகளாலும்‌, பேரறிஞர்‌ அண்ணாவின்‌ தமிழ்‌ உணர்வுமிக்க பேச்சாற்றாலின் பாலும்‌ ஈர்க்கப்பட்டு, பொது வாழ்க்கையில்‌ தன்னை அர்ப்பணித்துக்‌ கொண்டார்‌.
பள்ளிப்‌ பருவத்திலேயே தமிழ்‌ மொழியின்‌ மீது தீவிர பற்று கொண்டிருந்தார்‌. உயர்‌ படிப்பு படிக்கின்ற காலத்தில்‌ அண்ணாமலை பல்கலைக்‌கழகத்தில்‌ தமிழ்‌ இலக்கியம்‌ முதுகலைப்‌ படிப்பை முடித்தார்‌. 1944 முதல்‌ 1957ம்‌ ஆண்டு வரை‌ சென்னை பச்சையப்பன்‌ கல்லூரியில் துணைப்‌ பேராசிரியராக பணியாற்றி வந்தார்‌
பல்கலைக்கழகத்தில்‌ படிக்கின்ற நாட்களிலும்‌, துணைப்‌ பேராசிரியாக பணியாற்றிய காலங்களிலும்‌ திராவிட இயக்கத்தின்பால்‌ பெரிதும்‌ ஈர்க்கப்பட்டு, பொது வாழ்க்கையில்‌ தண்ணைத்‌ தீவிரமாக ஈடுபடுத்திக்‌ கொண்டார்‌. பேரறிஞர்‌ அண்ணா‌ பங்கேற்ற விழாவில்‌, பேராசிரியர் அன்பழகன்‌ ஆற்றிய உரையே அவர்‌, வாழ்க்கையில்‌ திருப்பு முனையாக அமைந்தது.
1962ம்‌ ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும்‌, 1967 ஆண்டு தொடங்கி 1971ம்‌ ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும்‌ தொடர்ந்து 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும்‌ திறம்படப்‌ பணியாற்றியுள்ளார்‌. முத்தமிழறிஞர்‌ கலைஞர் முதலமைச்சராக பொறுப்பேற்ற காலத்தில்‌ மக்கள்‌ நல்வாழ்வு, சமூக நலத்துறை, நிதி மற்றும்‌ கல்வித்‌துறை அமைச்சராக பணியாற்றினார்‌’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று காலை சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ வளாகத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள, மறைந்த திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் 8 அடி உயர முழு உருவ வெண்கல சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், சாமிநாதன், பொன்முடி மற்றும் பேராசிரியர் அன்பழகன் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.