பொது இடத்தில் மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட போலீஸ் ஏட்டுக்கு அடி-உதை : 4 பேர் கைது…

சென்னை: சென்னை கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் 4 பேர் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து மது அருந்தி கொண்டு ரகளை செய்வதாக கிண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அந்த பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்த ஏட்டு பாஸ்கர், சம்பவ இடத்துக்கு சென்று மது போதையில் தகராறு செய்து கொண்டிருந்த 4 பேரையும் எச்சரித்து அங்கிருந்து கலைந்து செல்லும்படி கூறினார்.அதற்கு மறுத்து போலீஸ் ஏட்டு பாஸ்கரிடம் அவர்கள் தகராறு செய்தனர். வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து பாஸ்கரை அடித்து உதைத்தனர். இதில் போலீஸ் ஏட்டு பாஸ்கரின் உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது. அவர் சைதாப்பேட்டை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இது பற்றி கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கியதாக கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் பகுதியை சேர்ந்த வேன் டிரைவர் சுதர்சன் (26), சுதாகர் (35), முருகானந்தன் (31), காமராஜ் (49) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் முதன்மை மொழி; பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை:தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மையான நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்க வேண்டுமென்றும், உயர்

புதிய அரசு பொறுப்பேறற 116 நாட்களில் 550 குற்றச் சம்பவங்கள்; குற்றவாளிகளாக நிற்கும் ஆளும் கட்சி நிர்வாகிகள் பட்டியலிட்ட உதயநிதி

சென்னை:சட்டபேரவையில் இன்று முதல்வர் விஜய் தலைமையில் கீழ் உள்ள காவல்துறை மானியக் கோரிக்கை

தமிழ்நாடு சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்க 30ம் தேதி கடைசிநாள்: சென்னை ஆட்சியர்

சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் நல்வழிகாட்டுதலின்படி சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஏற்றுமதியில் 2-வது இடம்: இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த காஞ்சிபுரம்!

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா தலைமையில் மாவட்ட