மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத் திறப்பு விழா – முதல்வர் திறந்து வைத்தார்….

மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். பின்னர், முதல்வர் பேசியதாவது: திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்கள் கல்வியும், சுகாதாரமும்தான்.

கலைஞர் நூற்றாண்டு தொடக்கமாக, கடந்த ஜூன் 15-ம் தேதி கலைஞர் உயர் சிறப்பு மருத்துவமனையை சென்னை கிண்டியில் திறந்துவைத்தேன். தற்போது மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்துவைத்துள்ளேன்.

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை என்றால், கலைநகர் மதுரை. அண்ணாவுக்கு நூற்றாண்டு நூலகத்தை சென்னையில் அமைத்து தந்தார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. தென் தமிழ்நாட்டின் அறிவாலயத்தை மதுரையில் நான் அமைத்திருக்கிறேன்.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் நூலகம் அமைக்காமல், வேறு எங்கு அமைக்க முடியும்? மதுரையில் நீதிகேட்ட கண்ணகிக்கு, கருணாநிதி எழுதாத எழுத்தோவியங்கள் இல்லை.

திமுக தலைமைக் கழகத்தை உருவாக்கிய அண்ணா, அதற்கு அறிவகம் என்று பெயர் வைத்தார். ஆனால் அண்ணா அறிவாலயம் என்று பெயர் வைத்தவர் கருணாநிதி. இது அரசியல் இயக்கமல்ல, அறிவு இயக்கம்.

இந்த நூலகத்தை சிறப்பாக அமைக்க உதவிய அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஸை மட்டுமின்றி, கடுமையாக உழைத்த கடைக்கோடி மனிதர் வரை அனைவரையும் பாராட்டுகிறேன்.

பொதுவாக ஹெச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார், பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மாட்டார். மாணவர்களான நீங்கள் அவரைப் பார்க்க வேண்டும் என்பதற்காக, இந்த விழாவுக்கு அவரை அழைத்து வந்திருக்கிறேன். அவர் மிகப் பெரிய தொழிலதிபர் மட்டுமல்ல, இந்திய தொழிலதிபர்களில் அதிக நன்கொடை வழங்குபவர். ஏறத்தாழ 50 நாடுகளில், 2 லட்சம் பேர் இவரது நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். கிராமத்தில் பிறந்து, மாநகராட்சிப் பள்ளியில் படித்து, தொழில் தொடங்கி முன்னேறியவர் ஷிவ் நாடார்.

குழந்தைகள், மாணவர்கள், போட்டித் தேர்வர்கள், மாற்றுத் திறனாளிகள் பயனடையும் வகையில், 6 தளங்கள், 3.5 லட்சம் புத்தகங்கள் இந்த நூலகத்தில் இடம்பெற்றுள்ளன. உங்களை அன்போடு வரவேற்க, கருணாநிதி சிலையாகக் காத்துக்கொண்டிருக்கிறார்.

அவர் மாணவராக இருந்தபோது, கையெழுத்துப் பிரதி நடத்தினார். எழுத்து, இலக்கியம் என பல்வேறு துறைகளில் முத்திரை பதித்தார். அவர் எழுதிய புத்தகங்களை வைத்தாலே, அது பெரிய நூலகமாக அமையும். கருணாநிதி மாணவராக இருந்த காலத்தில் மொழிக்காகவும், இனத்துக்காகவும் போராடத் தொடங்கினார். 13 வயதில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றார். காமராஜர் பிறந்த நாளை, கல்வி வளர்ச்சி நாள் என அறிவித்தவர் கருணாநிதி. அந்த நாளில்தான் நூலகத்தைத் திறந்து வைத்திருக்கிறோம்.

நாட்டில் தரமானக் கல்வி வழங்குவதில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடம் வருவதற்கு, அனைத்து வழிகளிலும் முயற்சிசெய்து, தொடர்ந்து உழைத்து வருகிறோம். மாதந்தோறும் புதுமைப் பெண் திட்டத்தில் ரூ.1,000 வழங்குகிறோம். செப்.15ல் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்தப் போகிறோம்.

எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் அரசின் நோக்கம். மக்களுக்குத் தொண்டு செய்வதற்குத்தான் இந்த முதல்வர் பதவி என்று கருதுகிறேன். அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் என்ற ஒற்றை இலக்கோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அரசு உருவாக்கித் தரும் அனைத்து வாய்ப்புகளையும், நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். கலைஞர் சொன்னதைப்போல நானும் சொல்கிறேன், ‘புத்தகத்தில் உலகைப் படிப்போம்; உலகைப் புத்தகமாகப் படிப்போம்’. இவ்வாறு முதல்வர் பேசினார்.

நூலகக் கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட பணியாளர்களுக்கு, முதல்வர் நினைவுப் பரிசுகளை வழங்கினார். விழாவில், அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், சு.வெங்கடேசன் எம்.பி., கோ.தளபதி எம்எல்ஏ, ஹெச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார், தலைவர் ரோஷினி நாடார் பங்கேற்றனர். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வரவேற்றார். பொதுப்பணித் துறைச் செயலர் பி.சந்திரமோகன் நன்றி தெரிவித்தார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65