திருச்செந்தூர் அருகிலுள்ள நாலுமாவடி ஊராட்சியில் உள்ளாட்சி தேர்தலில், திமுக பிரமுகர் ராஜேஷ் என்பவர் 7-வது வார்டில் போட்டியிட்டு, வெற்றிபெற்று துணைத்தலைவராக பதவி வகித்து வந்தார். மேலும், ராஜேஷ் தேர்தலில் போட்டியிட்டபோது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், கொலை வழக்கில் அனுபவித்த 7 ஆண்டு சிறை தண்டனையை 2 ஆண்டு சிறை தண்டனையாக குறைத்து தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து நாலுமாவடியை சேர்ந்த அழகேசன் என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதி, தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்று நடவடிக்கை எடுக்கும்படி, ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலருக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலை பெற்றனர். இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், நாலுமாவடி ஊராட்சியில் ராஜேஷின் 7-வது வார்டு உறுப்பினர் பதவியை பறித்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






