சென்னை:
தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கேரளாவில் பெரும்பாலான இடங்களில் கன மழை பெய்து வருகிறது. கேரள மாநிலத்தை ஒட்டிய தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களிலும் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்தே காணப்படுகிறது.
கேரளாவில் பெய்து வரும் தென் மேற்கு பருவமழையாலும், மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும் தமிழ்நாட்டில் இன்று தொடங்கி 15ம் தேதி வரையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி வரை இருக்கும். தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும்.
வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் 12ம் தேதியில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும். அத்துடன் வட தமிழக கடலோரப் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா அதை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மணிக்கு 55 கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

சைதாப்பேட்டையில் உள்ள எச்பி கேஸ் சிலிண்டர்
தற்போது சைதாப்பேட்டையில் உள்ள எச்பி கேஸ் சிலிண்டர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படும் நிலை





