வித்தியாசம்… ஆனால் உண்மை… காரைக்குடியில் பெண்ணை தத்தெடுக்கும் விழா

காரைக்குடி:
காரைக்குடியை சேர்ந்த எல்.சி. லட்சுமணன் என்பவர் வெளியிட்டுள்ள வித்தியாசமான பதிவில் கூறியிருப்பதாவது:
நாம் கல்யாணம், காதுகுத்து, வளைகாப்பு, புதுமனை புகுவிழா, மஞ்சள் நீராட்டு விழா என பல்வேறு விதமான நிகழ்வுகளுக்கு சென்றிருப்போம். ஆனால் தத்தெடுத்த குழந்தையை அறிமுகப்படுத்தும் புதிய சமூக மாற்றத்திற்கான விழாவை நீங்கள் கேள்விப்பட்டது உண்டா? அதனை கண்டதுதான் உண்டா? அப்படிப்பட்ட விழாவிற்கு நான் சென்றிருந்தேன். தத்து எடுத்ததை விரிவாக அனைவருக்கும் தெரிவிக்கும் விதத்தில் மிக நேர்த்தியாக நிகழ்விற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
தமிழ்நாடு மின்சார துறையில் இருந்து பணி ஓய்வு பெற்ற காரைக்குடி அழகர்சாமி வீட்டிற்கு, தமிழ்நாடு அரசின் குழந்தைகள் மையத்திலிருந்து சங்கீதா என்ற பெண்ணை த் தத்தெடுத்ததை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
விழாவில் பேசிய ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் மாதவன் அ இந்நிகழ்வு சமூக மாற்றத்திற்கான ஒரு முன்னெடுப்பு இது என்று தெரிவித்தார். எத்தனையோ விழாக்களுக்கு நிகழ்வுகளுக்குச் சென்று இருக்கின்றோம். ஆனால் தத்தெடுப்பு நிகழ்வுக்கு நாங்கள் வந்திருப்பது இதுவே முதல்முறை என்று மிகுந்த மகிழ்வாக இருக்கின்றது என்று கூறினார்.
அழகர்சாமி தங்களது வாழ்க்கையில் அவருக்கும், அவரது மனைவிக்கும் குழந்தை இல்லை என்பதால் ஏற்பட்ட பல்வேறு விதமான இன்னல்களை வெளிப்படையாக விரிவாக அனைவருக்கும் விளங்கும் வகையில் விளக்கினார்.
குழந்தை இல்லாததால் சிலரின் பேச்சுகளால் தங்களுக்கு ஏற்பட்ட பல்வேறு விதமான மன உளைச்சல்கள், குழந்தை உருவாவதற்கு உடல் ரீதியாக பல விதமான ஆயுர்வேதா, சித்தா, அலோபதி வைத்தியங்களுக்கு சென்று அதன் மூலமாக உடலில் ஏற்பட்ட பல்வேறு விதமான இடர்பாடுகள், பண விரயங்கள் அனைத்தையும் மிகத் தெளிவாக விரிவாக விளக்கினார் .
அவர்களது தங்கை பேசும்போது, ஒரு குழந்தையை பெற்று எடுப்பதற்கு 10 மாதங்கள் ஆகும். ஆனால் இந்த குழந்தையை தத்து எடுப்பதற்கு 11 மாதங்கள் ஆகிவிட்டது. அரசு குழந்தைகள் மையத்தில் இருந்து குழந்தையை தத்து எடுப்பது என்பது பல்வேறுவிதமான அரசின் நடைமுறைகளை பின்பற்றி அதன் பிறகுதான் அவர்கள் குழந்தையை தத்து கொடுக்கின்றனர்.
அரசினுடைய நடைமுறைகள் மிகத் தெளிவாக இருப்பது நன்றாக பிடித்தமாக இருந்தது என்றும் தெரிவித்தார். தமிழக அரசின் குழந்தைகள் மையத்தில் , முதலாவதாக குழந்தையை தத்தெடுக்க வரும் பெற்றோருக்கு அறிமுகப்படுத்துகிறார்கள். பிறகு அந்த குழந்தைக்கு அறிமுகப்படுத்துகிறார்கள். துறை ரீதியாக தத்து எடுக்கக் கூடிய பெற்றோரின் வீட்டிற்கு சென்று ஆய்வு செய்கின்றார்கள்.
அதையும் மூன்று, நான்கு முறை பல்வேறு விதமான அதிகாரிகள் வந்து ஆய்வு செய்கின்றார்கள். அதன் பிறகு அவர்கள் மீது எந்தவிதமான குற்ற நடவடிக்கையும் இல்லை என்று ஆதாரங்களும் பெற்றுக் கொள்கின்றனர்.
பல நாட்கள் இரு தரப்பினரும் பேசுவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். பிடித்திருந்தால் மட்டுமே அவர்களை தத்து எடுப்பதற்கு அனுமதி அளிக்கின்றனர். குழந்தைகள் மையமும் மிகவும் சிறப்பாக , பாதுகாப்பாக இருப்பதாக தோழர் அழகர்சாமி அவர்கள் தகவல் தெரிவித்தார்கள். 10 மாதத்திற்கு மேலாக பல்வேறு முயற்சிகள் எடுத்து, தங்களைதான் அந்த குழந்தை தத்தெடுத்து உள்ளது என்று அவர் தெரிவித்த பொழுது உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. அழகர்சாமி வெளிப்படையாக கூறிய பல்வேறு தகவல்கள் இன்றைய சமுதாயத்திற்கும், சமூகத்திற்கும் நல்ல பயனுள்ள தகவலை ஏற்படுத்துவதாக அமைந்து இருந்தது.
கருத்துப் பரவல் என்பது மிக முக்கியமான விஷயம். பல குடும்பத்தினரும் இவருடைய அனுபவங்களை பார்த்து அதிகமான தகவல்களை கற்றுக்கொள்ள வேண்டும். குழந்தை இல்லாதவர்கள், குழந்தை இல்லையே என்ற ஏக்கத்தை விடுத்து இதுபோன்று காப்பகத்தில் இருக்கக்கூடிய குழந்தைகளை தன் குழந்தையாக தத்து எடுத்து வளர்க்க முன்வந்தால் , இந்த சமூகம் முன்னேற்றம், சமுதாய முன்னேற்றம் மிக எளிதாக வந்துவிடும்.
இதுபோன்று தத்து எடுக்கும் நிகழ்வுகள் சமூக மாற்றத்திற்கான நிகழ்வுகளாக வருங்காலத்தில் அமைய வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் விருப்பமாகும்.
எனவே குழந்தை இல்லாதவர்கள் வருத்தப்பட்டு கொண்டிருப்பதை விட நமக்காக இந்த குழந்தை இந்த உலகத்தில் இருக்கின்றது என்று எண்ணி பல தடைகளை கடந்து , தத்து எடுத்து வளர்க்க தோழர் அழகர்சாமி போன்று முன் வந்தால் இன்னும் இந்த சமுதாயம் சிறப்பாக இருக்கும் என்பதே அனைவரின் சிந்தனையாகும் என்று கூறினார்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 வாக்குப்பதிவுமற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது ஊடக நபர்களுக்குஅங்கீகார கடிதம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றபொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, 23.04.2026 அன்று வாக்குப்பதிவுமையங்களுக்கும்,

வித்தியாசம்… ஆனால் உண்மை… காரைக்குடியில் பெண்ணை தத்தெடுக்கும் விழா

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 வாக்குப்பதிவுமற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது ஊடக நபர்களுக்குஅங்கீகார கடிதம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றபொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, 23.04.2026 அன்று வாக்குப்பதிவுமையங்களுக்கும்,