சைதாப்பேட்டை:
நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் உலகப் புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த தலம் கத்தோலிக்க கிருத்துவர்கள் மட்டுமின்றி அனைத்து மதங்களைச் சார்ந்த பக்தர்களும் வந்து வழிபாடு செய்யும் பிரசித்தி பெற்ற தலமாகும். மொழி, மதம், பண்பாடு போன்றவற்றால் வேறுபட்டிருக்கும் மக்களை எல்லாம் ஒன்றிணைத்து மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் சான்றாக இந்த ஆலயம் திகழ்கிறது.
வருடந்தோறும் இவ்வாலயத்தில் அன்னையின் பிறந்தநாளை முன்னிட்டு 11 நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்வருடத்திற்கான திருவிழா வரும் 29-ஆம் தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கப்பட உள்ளது. செப்டம்பம் 8ம் தேதி அன்னையின் பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெறும்.
முன்னதாக அன்னை மாதாவின் உருவம் பொறிக்கப்பட்ட கொடி பேராலயத்தின் முகப்பில் இருந்து கடற்கரை வழியாக ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு பின்பு கொடிக்கம்பத்திற்கு கொண்டு வரப்படும். ஆலயத்தில் வடக்கு பகுதியில் அமைந்திருக்கும் 90 அடி உயரக் கொடிக்கம்பத்தில் கொடியேற்றப்படும். இந்த விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் பாதயாத்திரையாக சென்று மாதாவை வழிபடுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டும் இதேபோன்று பாதயாத்திரையை தொடங்கியுள்ளனர்.
சென்னை சைதாப்பேட்டை. கோதாமேடு. அம்பேத்கர் நகர். 1வது பிளாக்கில் அமைந்துள்ள அன்னை ஆரோக்கிய மாதா சிற்றாலயத்தில் இருந்து புனித ஆரோக்கிய மாதா பாதயாத்திரை குழுவினர் நாகை மாவட்டத்தில் உள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா பேராலயத்திற்கு 15 ஆம் ஆண்டு பாதயாத்திரையை நாளை (19ம் தேதி) மேற்கொள்ள உள்ளனர்.
இதனை முன்னிட்டு பாதயாத்திரை குழுத் தலைவர் எம்.மதுரை தலைமையில் குழுவின் சார்பில் அதே பகுதியை சேர்ந்த சமூக சேவகரும், தகவல் எக்ஸ்பிரஸ் பத்தரிகை ஆசிரியரும் வெளியீட்டாருமான ஈ.இருதயராஜ் மேற்பார்வையில் ஊர் பொதுமக்களுக்கு சமபந்தி விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அண்ணா நகர், கோதாமேடு சலவையாளர் காலனி, டோபிகானா, திடீர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமானன மக்கள் சமபந்தி விருந்தில்பங்கேற்றனர்.
இதில் தீனா, சேகர், வினோத், சிற்றரசு செல்வம், செந்தில், கர்ணா, ஒருங்கிணைப்பாளர் ஏ.முருகன் மற்றும் சின்னமலை ஆரோக்கிய அன்னை, புனித தோமையார் பங்கை சேர்ந்த ஆலய நிர்வாகிகள், அன்பிய தலைவர்கள், அன்பிய பொறுப்பாளர்கள், பங்கு நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

வேளாங்கண்ணி மாதா ஆலய ஆண்டு திருவிழா: சைதை பாதயாத்திரை குழுவினர் சமபந்தி விருந்து
சைதாப்பேட்டை:நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் உலகப் புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம்






