அவதூறு வழக்கு; பாட்னா கோர்ட்டில் வரும் 25-ந்தேதி ஆஜராக ராகுல் காந்திக்கு உத்தரவு

பாட்னா:
காங்கிரசின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, கர்நாடகாவின் கோலார் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரலில் நடந்த மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக அவருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் எதிரொலியாக, அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு கோர்ட்டு அனுமதி அளித்தது.
இதன்படி காங்கிரஸ் கட்சி மேல்முறையீடு செய்ய முடிவெடுத்து உள்ளது. இந்த சூழலில், அவருக்கு எதிராக அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகி வருகின்றன. அதனை எதிர்கொள்ளவும் அவர் தயாராகி வருகிறார்.
ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்புக்கு எதிராக காங்கிரஸ் கட்சிக்காரர்கள் நாடு முழுவதும் தீவிர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றத்திலும் கூட இந்த விசயம் எதிரொலித்தது. இதனால், பட்ஜெட் கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் சமீபத்தில் நடவடிக்கைகள் முடங்கின.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய மோடி பெயர் பற்றிய ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிராக பா.ஜ.க. தலைவர்களில் ஒருவர் மற்றும் பீகார் முன்னாள் துணை முதல்-மந்திரியான சுஷில் குமார் மோடி அவதூறு வழக்கு ஒன்று தொடுத்து உள்ளார். இந்த வழக்கு பாட்னா நகரில் உள்ள எம்.பி.-எம்.எல்.ஏ.க்களுக்கான கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து இந்த சர்ச்சைக்குரிய பேச்சு பற்றிய வழக்கில் வருகிற 25-ந்தேதி நேரில் ஆஜராகும்படி ராகுல் காந்திக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி சுஷில் மோடியின் வழக்கறிஞர்கள் சஞ்சய் மற்றும் பிரியா குப்தா கூறும்போது, கோர்ட்டில் நேரில் அவர் இன்று ஆஜராகி இருக்க வேண்டும். ஆனால், கேரளாவில் பேரணியில் அவர் ஈடுபட்டு உள்ளார். இதனால், அவருக்கான ஜாமீனை ரத்து செய்யும்படி கோர்ட்டில் கேட்டு கொண்டுள்ளேன் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்தே நேரில் ஆஜராகும்படி கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.