விவசாயிகளையும் உழைக்கும் மக்களையும் சீரழிக்கும் அரசின் பொதுப்பயன்பாட்டு அலுவலகங்கள் அதிகமுள்ள குருந்தங்குடி அரசு மதுபானக்கடையை இழுத்துமூட தமிழக அரசை வலியுறுத்தியும்நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் புரட்சியாளர் அம்பேத்கரை அவமதித்துப் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும்உத்திரபிரதேச மாநிலம் சம்பால், ஞானவாதி இசுலாமிய வழிபாட்டுத் தலங்களை தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் இடிக்கத் துடிக்கும் பாசிச பா.ச.க. அரசைக் கண்டித்தும்விவசாய நிலங்களை அழித்து மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தின் மூலம் கார்ப்பரேட் கம்பெனிகளுக்குத் துணைபோகும் ஒன்றிய அரசைக் கண்டித்தும்விளிம்புநிலை மக்களின் சுயமரியாதைக்காகப் போராடிய சமூக சீர்திருத்தவாதியான தந்தை பெரியாரை இழிவுடுத்திப் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானைக் கண்டித்தும்திருவாடானையில் காலை 10.00 மணியிளவில், ஐந்திணை மக்கள் கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் தோழர் க.ஆறுமுகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நமடைபெற்றது.பெரியார் பேரவையின் தலைவர் தோழர் நாகேசுவரன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் பெரியார்முத்து, தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தோழர் ஆரோக்கியமேரி, இ.இ.இளைஞர் மாணவர் இயக்கத்தின் தலைவர் பாவெல், உழவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் அழகர்சாமி, ஆதித்தமிழர் கட்சியின் தென்மண்டல செயலாளர் தோழர் பாஸ்கரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.ஐந்திணை மக்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் வை.தேவதாசு, இணை ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆரோ.ஸ்டீபன்ராஜ், தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தலைவர் தோழர் மீ.த. பாண்டியன் ஆகியோர் கண்டனப் பேருரையாற்றினர்.மேலும் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் தோழர் கு.சந்திரசேகர், உழவர் பாசறையின் மாநிலச் செயலாளர் தோழர் ஜோசப், முகவை மாவட்டப் பொருளாளர் தோழர் இமானுவேல், மாவட்ட துணைத்தலைவர் தோழர் சார்லஸ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் சக்திவேல், மாவட்ட துணைத்தலைவர் தோழர் சேவியர், திருவாடானை ஒன்றியச் செயலாளர் தோழர் சேகர், ஒன்றியத் தலைவர் தோழர் சவரிமுத்து,புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் தோழர் முத்து,ஆர்.மங்கலம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் தோழர் இளங்கோ, மாவட்டக்குழு உறுப்பினர்கள் தோழர் போஸ், தோழர் ஜோதிமணி, புதுக்கோட்டை மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் ஞானப்பிரகாசம், இளையான்குடி ஒன்றியச் செயலாளர் தோழர் அழகுராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.முன்னதாக, தமது இறுதிக்காலத்தில் ஐந்திணை மக்கள் கட்சிக்கு ஆலோசகராக விளங்கிய ‘சாதி ஒழிப்பு களப்போராளி’ தோழர் பூ.சந்திரபோசு அவர்களின் இரண்டாமாண்டு நினைவுநாளையொட்டி ஒரு நிமிடம் அகவணக்கம் செலுத்தப்பட்டது.இறுதியாக, கட்சியின் இராமநாதபுரம் மாவட்டத் தலைவர் தோழர் தைனேஸ்ராஜ் நன்றி கூறினார்.ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், ஆதரவாளர்கள், குருந்தங்குடி, சம்பாநெட்டி பகுதியைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு