அண்மை செய்தி
அதிமுகவின் ஒரு தரப்புக்கு ஆதரவாக முதலமைச்சர் செயல் படுவது ஏற்புடையது அல்ல. மருத்துவ சேவை என்பது வெறும் தொழில் அல்ல, அது ஒரு புனிதமான அர்ப்பணிப்பு தவெக அரசை விமர்சித்து, அதிமுகவுக்கு ஆதரவாக அறிக்கை விட்ட மு.க.ஸ்டாலின் முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு

சட்டம், ஒழுங்கு நிலைமை மோசமாக உள்ளது – டிடிவி தினகரன்…

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் வீட்டின் அருகே மது குடித்தவர்களை தட்டிக்கேட்ட இரண்டு பெண்கள் உள்ளிட்ட 4 பேர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. இந்த சம்பவத்திற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந் நிலையில் இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட செய்தியில்:- திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியம் மாதப்பூர் ஊராட்சியின் அமமுக செயலாளர் பன்னீர்செல்வத்தின் தாயார் ரத்தினம்மாள் உட்பட அவரது குடும்பத்தைச் சார்ந்த மேலும் மூவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

வீட்டின் முன் மது அருந்தியவர்களை தட்டிக் கேட்ட ரத்தினம்மாள் உட்பட அவரின் குடும்ப உறுப்பினர்களும் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையின் முதல்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. இந்த திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் நாள்தோறும் கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கு பிரச்னை அதிகரித்துள்ளது என்பதற்கு தற்போது நடைபெற்ற கொலைச் சம்பவம் ஒரு சாட்சி.

காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர், தொடர்ந்து அரங்கேறி வரும் சட்டம், ஒழுங்கு பிரச்னைகளில் தனி கவனம் செலுத்தி இந்த கொலைச் சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து உரிய தண்டனையை பெற்றுத்தர வேண்டும் என டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு