சென்னை:
சென்னையில் காலையில் கடுமையான வெயில், இரவில் பலத்த காற்றுடன் மழை என்கிற நிலை உருவாகியுள்ளது. தற்போது சென்னையை சுற்றி மழைநீர் வடிகால் பணிகள், மெட்ரோ ரயில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக இயந்திரங்கள் உதவியுடன் பள்ளம் தோண்டப்படுகிறது.
இந்தநிலையில் முக்கிய கடைவீதியாக திகழும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் சென்னை தியாகராயா நகரில் மெட்ரோ ரயில் பணிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் தி.நகரின் முக்கிய சாலைகளான கோபதி நாராயணா சாலை மற்றும் சர் தியாகராய சாலைகளை இணைக்கும் வகையில் டாக்டர் நாயர் சாலை உள்ளது. இந்த சாலையுடன் கோபாலகிருஷ்ணா சாலை மற்றும் ராம தெரு சந்திக்கும் இடத்தின் அருகே இன்று (28.09.2023) காலை திடீரென பள்ளம் ஏற்பட்டது.
சாலையின் நடுவே 6 அடி அகலத்தில், 10 அடி ஆழத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளத்தால், அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். உடனடியாக அங்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் அந்த சாலையின் குறுக்கே தடுப்புகள் அமைத்து போக்குவரத்து தடை செய்தனர். இதனால் வாகனங்கள் வேறு வழியில் சுற்றிச் சென்றன.
டாக்டர் நாயர் சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாயால் மண் அரிப்பு ஏற்பட்டு சாலையில் பள்ளம் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதே சாலையில் ஏற்கனவே ஒருமுறை பள்ளம் ஏற்பட்டு சீர் செய்யப்பட்டது குறிப்பிடத்தக் கது. இந்த திடீர் பள்ளத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தரைக்கு அடியில் மெட்ரோ ரயில் பணிக்காக சுரங்கம் தோண்டும் பணியின் போது அவ்வப்போது சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகளை பீதியடையச் செய்தது போது, மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், கழிவுநீர் கால்வாயால் சாலையில் ஏற்பட்ட இந்த திடீர் பள்ளம் வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு