சென்னை:
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமககளிடையே குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் குப்பையைப் பிரிப்போம் & நாளையை காப்போம் என்ற 40 நாள் வீடுகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி தெற்கு வட்டாரத்தில் இன்று தொடங்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஈ.சி.ஆர்.பி.சரவணன், சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு &192க்குட்பட்ட தொழிலாளர் குடியிருப்புப் பூங்காவில் இத்திட்டத்தை தொடங்கி வைதது அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வீடு வீடாகச் சென்று மக்காத குப்பைகளை தனியாக சேகரித்து வழங்குவதற்கான பிரத்யேகப் பை மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் வீடுகளின் சுரில் ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சென்னை மாநகராட்சி சார்பில் குப்பையைப் பிரிப்போம் & நாளையை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமககளிடையே குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை






