தமிழர் ஆள.. தமிழ்மொழி வாழ.. படையென நடத்து.. பகைவர்க்கு உணர்த்து!
தமிழர் தன்னுரிமை வெல்க! கொள்க!எல்லாம் வாய்மொழி. எல்லாம் வெற்றுத் தனம். எல்லாம் பொய் புகழ்ச்சி. எல்லாம் வஞ்சகம். இதுதான் திராவிடம். அதுதான் ஈவெரா. அதுதான் கருணாநிதி. அதுதான் எம் சி ஆர். அதுதான் இன்னும் பிறரும்.. அதுதான் இன்னும் எவரும்.அதனால் ஆனது இம்மண் களராய். அதனால் போனது தமிழர் வளமும் சிறப்பும். அதனால் போனது தொழிலும் வளமும். அதனால்.. அதனால் தாழ்ந்தோம் தமிழர் யாரும். அதனால் அழிந்தது நம் கலைகள் புகழும். அதனால்.. பொது உரிமைகள் எதுவும். அதனால்..அதனால்.. இனி பேசியே எழுவோம் தமிழர் இம் மண் காக்க எவரும் யாரும்..அதனால் இனி விடுவோம் திராவிடர் அழிப்பை. அதனால் வளர்ப்போம் தமிழ்மொழி இன செழிப்பை. அதனால் வருமே தமிழர் தன்னுரிமை எல்லாம். அதனால் தமிழர் நிலைப்போம் உலகில் எல்லாம்.நம்மை பற்றி நாமே பேசாது
நம் நலம் பற்றி நாமே நிற்காது..
பிறரை போற்றியா பெருமைகள் சேரும்?
பேதைத் தனங்களா உரிமைகள் ஆளும்? அதற்கே விழைவாய் முடிவாய்!..ஒவ்வொரு மக்களுக்கும் அவரவர் பேச்சே தாய்மொழி! அதுபோல் நமக்கு அன்னைத் தமிழ்மொழி!
ஒவ்வொரு இனத்திற்கும் அதுதான் அவர்களின் முகவரி. அப்படி நமக்கு தமிழர் என்பது பெயர் தமிழ்வழி!ஒவ்வொரு இன மக்களுக்கும் தங்களுக்கென பலப்பல பழக்க வழக்கங்கள். அவையே அவர்களின் வழிபாடு. அப்படியேயாயின நம் தெய்வ வழிபாடுகளும் வணங்கல்களும். அதனால் நம் பண்பாடுகள் ஒன்றும் இழுக்குகள் அல்ல. பிறர் சொல்ல கேட்டு அழிப்பதற்கு. அவை தான் நம் தனித்த பெருமைகளே!அதுபோலவே இடம் போல் ஆயின கலைகளும் உடைகளும். அதுபோல் ஆயின உணவும் உணர்தலும். அது போல் ஆயின நாளும் பொழுதும் கிழமையும் ஆண்டும் கணக்குகளும் அதுவே நம் தனிப் பெருமை.!அதனால் வாசனையும் மண்ணையும் அளந்தவரானோம் சிறப்பினில்!அதற்கென எழுந்தன படிப்பும் கல்வியும். நமக்குள் பண்பும் ஒழுங்கும். அதற்கெனவேஇருப்பன அரசும் ஆட்சியும். அதற்கெனவே நின்றன போரும் படைகளும் அதற்கென இருந்தன கல்வியும் அறிவும்! அதற்கென எழுந்தனர் சான்றோர் பலரும்.அதுபோல் நடத்தினர் தமிழர் அறமும் புறமும். அதற்கென வைத்தனர் படிப்பும் அறிவும். அதற்கென நூற்றனர் கொடையும் தரவும்! அதற்கென வாழ்ந்தனர் சிறப்புகள் பெறவும்.அழகென நிற்க உடையும் உணர்வும். அதற்கென சொல்ல புலவர் பலரும். ஆக்கங்கள் செய்ய யோகமும் மருந்தும் ஆடிபாடிட இசையும் நடையும்.. உரையும்..இப் படி இருக்க ஏற்றா படியில்.. இன்று யாரோ சொல்ல.. அவர்களின் பிடியில். திராவிடர் என்பார் வழியில்.. தவறில்குளித்திட நாம்?.நன்றென செய்யத் தெரியார் செயலில்.. தப்புத் தவறாய் தாழ்த்திப் பேசும் கீழ்மை உரையினில் தமிழர் செல்ல.. செல்லச் செல்ல.. சென்றன நமது செல்வ வளங்கள்.. அறிவும் திறனும்.. ஆக்கங்கள் பலவும்..வேட்கைகள் இன்றி, வெட்கமும் இன்றி.. பிறர் வந்து சொல்ல பேதைகள் ஆனோம்.. பெற்றவர் வெறுக்க கோழைகள் ஆனோம். போர்வையை விட்டு அறிவின்றிப் போனோம். தமிழர் மேன்மைகள் போக, பேசுதல் போக.. எதிரிகள் ஆட, இணைப்புகள் இன்றி கெட்டுப் போனோம்..பொய்யர் பின்னால் போனது போதும். பொய்யை சுமந்து அழிந்தது போதும். வேடமிட்டார் வீழ்ந்திட வேண்டும். வெற்றியும் தமிழர் கைவர மீண்டும்!மீண்டெழ நாமும் ஒன்றென சேர.. சேரர் சோழர் பாண்டியர்களாக, செறுபகை வென்று தமிழினம் ஆள!.போனது போதும். பிறரிடம் பட்ட அடிகளும் போதும். மானம் இழந்து மதி கெட்டதும் போதும். மதிப்பாய் தமிழர் மீண்டெழுந்திட வேண்டும்!தொழுவோம் தமிழை.. தொடர்ந்தெழ மேலே!.. தொல்லைகள் பட்டது போகட்டும் கீழே. வறுமையில் உழன்று கையேந்தல்கள் போக.. வளமார் தமிழகம் மேலெழ வேந்தே!பாறையில் ஊற்று தோண்டினும் வாரா..
பள்ளிகளின்றி தமிழ் பேசியும் வாழா..
போற்றலின்றி புலமை புதிதினில் தேறா
புகழ்ந்தினி ஏற்று தமிழர் நாட்டினை மேலாய்!அதற்கென தமிழர்!
ஆட்சியும் தமிழில்!
புதிதென யாவும் புகுந்தெடு தமிழினில்!
கைவிடு திரிபுகளை
கைப்பற்று தமிழர் உணர்வுகளை!
வரவேற்கும் தமிழ்தேசியம் வளர்தெடு நமதை
வாழ்த்திட வேண்டும் உலகோர் மகிழ்ந்தே!வரவேற்கும்
-பாவலர் மு இராமச்சந்திரன் தலைவர் தமிழர் தன்னுரிமைக் கட்சி.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு