குறள் 43:தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான்என்றாங்கு ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை
குறள் விளக்கம் : தென்புலத்தார் தெய்வம், விருந்தினர் சுற்றத்தார், தான் எனம் ஐவகை இடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமை ஆகும்.
திருமறை விளக்கம்: அப்படியே திருமறையும் ஆதியாகமம் 21:8பிள்ளை வளர்ந்து, பால் மறந்த நாளிலே ஆபிரகாம் பெரிய விருந்து செய்யப்பண்ணினான்” என்றும், எபிரேயர் 13:2 அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள். அதினால் சிலர் அறியாமல், தேவதூதர்களையும் உபசரித்ததுண்டு” எனவும், யோபு 1:4 “அவன் குமாரர், அவனவன் தன் தன் நாளிலே தன் தன் வீட்டில் விருந்து செய்து, தங்கள் மூன்று சகோதரிகளையும் தங்களோடே போஜனம்பண்ணும்படி அழைப்பார்கள்” என்றும்.மத்தேயு 14:16 ” இயேசு அவர்களை நோக்கி: அவர்கள் போகவேண்டுவதில்லை. நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார்” என்றும். யோவான் 4:32 நான் புசிப்பதற்கு நீங்கள் அறியாத போஜனம் எனக்கு உண்டு என்றும் திருக்குறளும் திருமறையும் ஐம்புலத்து மக்களிடத்தில் ஆற்ற வேண்டிய கடமைகளைப் பற்றியஒரே கருத்தையே வலியுறுத்துவதை அறியலாம்.






