புதுடெல்லி:
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றக் கோரிய உயர் நீதிமன்ற உத்தரவை உடனடியாகச் செயல்படுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கடந்தாண்டு டிசம்பர் 3-ம் தேதி தீபம் ஏற்றக்கோரி மதுரையைச் சேர்ந்த ராமரவிகுமார் உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத்தூணில் கார்த்திகை திருநாள் அன்று தீபம் ஏற்ற வேண்டுமென கடந்த 2025 டிசம்பர் 1ம் தேதி அன்று உத்தரவிட்டார்.
ஆனால், இந்த உத்தரவு நிறைவேற்றப்படாத நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர் காவல் ஆணையர் மற்றும் கோயில் செயல் அலுவலர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து ஆட்சியர், காவல் ஆணையர், செயல் அலுவலர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாததற்காக வருத்தம் தெரிவித்தனர்.

இருமாநில பிரச்சனையை தணித்தது: தமிழகத்தை நோக்கிப் பாய்ந்துவரும் காவிரி!
திருச்சி:காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை பெய்ததால் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து






