நாணயம் மற்றும் பணநோட்டுப் பரிமாற்ற விழாவுக்கு இந்திய ரிசர்வ் வங்கி ஏற்பாடு

ஜி20 மக்கள் பங்கேற்பு நிகழ்வின் ஒரு பகுதியாக பாரத ஸ்டேட் வங்கியின் காஞ்சிபுரம் கிளையில் நாணயம் மற்றும் பணநோட்டுப் பரிமாற்ற விழா இந்திய ரிசர்வ் வங்கியால் நடத்தப்பட்டது.

2023 ஜூன் 12 அன்று நடைபெற்ற இந்த விழாவை ரிசர்வ் வங்கியின் உதவிப் பொது மேலாளர் ஸ்ரீகுமார் தொடங்கிவைத்தார். இந்திய ரிசர்வ் வங்கியின் தூய்மையான பணநோட்டு அமலாக்க குறிக்கோளின் படி நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் பல்வேறு மதிப்பில் உள்ள நாணயங்கள் பொதுமக்களுக்கு கிடைக்க வகைசெய்யப்பட்டது.

இந்த விழாவின் போது அழுக்கேறிய மற்றும் கிழிந்த பணநோட்டுகள் வங்கிக்கிளை மூலம் மாற்றி வழங்கப்பட்டன. ஜி20 வணிக நடைமுறை பற்றி பரவலான பிரச்சாரத்தை மேற்கொள்ளும் வகையில் பொதுமக்களுக்கு தொப்பிகளும் டி-சர்ட்களும் விநியோகிக்கப்பட்டன.

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு