பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் ஆர். ஸ்ரீதரை மத்திய அமைச்சர் டாக்டர் எல். முருகன் கௌரவித்தார்; ‘இந்திய பொதுச் சேவை ஒளிபரப்பில் புதுமைகள்’ புத்தகத்தை சென்னையில் வெளியிட்டார்!

மத்திய தகவல் ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன், இன்று சென்னை ஆகாஷ்வாணி நிலையத்தில் பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் ஆர். ஸ்ரீதரைப் கௌரவித்து, ‘இந்திய பொதுச் சேவை ஒளிபரப்பில் புதுமைகள்’ என்ற புத்தகத்தை வெளியிட்டார். இந்நிகழ்ச்சிக்கு ஆகாஷ்வாணி தலைமை இயக்குநர் திரு ராஜீவ் குமார் ஜெயின் தலைமை தாங்கினார்.

மூத்த பல்கலைக்கழக நிர்வாகி டாக்டர் என் சுந்தரம் எழுதியுள்ள இப்புத்தகம், ஆகாஷ்வாணி, தூர்தர்ஷன் ஆகியவற்றின் தொழில்நுட்ப, கொள்கை ரீதியான மாற்றங்களை விவரிக்கிறது. இதன் முதல் அதிகாரப்பூர்வ பிரதியை புதுடெல்லியின் ஊடகத் தொடர்பு அறக்கட்டளையின் திரு ஆசிஷ் திவாரி பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய டாக்டர் எல் முருகன், இந்நிகழ்வின் ஆழமான வரலாற்று முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டார். “ஆகாஷ்வாணி தனது 90-வது ஆண்டையும், சென்னை ஆகாஷ்வாணி நிலையம் தனது 88-வது ஆண்டையும் கொண்டாடும் இந்த வேளையில், இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த அங்கமாக இருந்து பல ஆண்டுகளாகப் அளப்பரிய பங்களிப்பை வழங்கிய பத்மஸ்ரீ டாக்டர் ஆர். ஸ்ரீதரைப் பாராட்டுவது பெருமையளிக்கிறது” என்று அமைச்சர் கூறினார்.கடைசி மனிதனுக்கும் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதில் அவரது வாழ்நாள் முயற்சிகளைப் பாராட்டிய டாக்டர் எல். முருகன், வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணம் மக்கள் பங்களிப்பால் இயக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இத்துறையில் அரசின் கவனத்தை சுட்டிக்காட்டிய அமைச்சர், வேவ்ஸ் உச்சி மாநாட்டில் சமுதாய வானொலிக்கான ஒரு பிரத்யேகப் பிரிவு இடம்பெற்றிருந்ததை எடுத்துரைத்தார்.நூலாசிரியர் டாக்டர் என். சுந்தரம் பேசுகையில், டாக்டர் ஸ்ரீதரின் பங்களிப்புகள் வழக்கமான மைல்கற்கள் என்பதைத் தாண்டி, அடிப்படையில் மாற்றத்தை ஏற்படுத்திய திருப்புமுனைகளாக இருந்ததால், தலைப்பில் ‘சாதனைகள்’ என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘புதுமைகள்’ என்ற வார்த்தையை பயன்படுத்தியதாக அவர் கூறினார். சமுதாய வானொலி, மக்களின் மேம்பாட்டுக்காக அவர் மேற்கொண்ட   புதுமை முயற்சிகளே  அவருக்குப் பத்மஸ்ரீ அங்கீகாரம் கிடைக்க வழிவகுத்தன என்றும் அவர் குறிப்பிட்டார்.நிகழ்ச்சியில் பேசிய பத்மஸ்ரீ டாக்டர் ஆர். ஸ்ரீதர், இதே அலுவலகத்தில் தான் ஒளிபரப்பிய தனது முதல் வானொலி நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தார். தனது வாழ்க்கையின் பல்வேறு சுவாரசியமான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட அவர், “ஒருங்கிணைப்பு, கூட்டுமுயற்சியுடன் மக்களை அரவணைத்துச் சென்றால் அரசுப் பணியிலும் புதுமைகளைப் புகுத்த முடியும்” என்றார்.ஆகாஷ்வாணி தலைமை இயக்குநர்  திரு. ராஜீவ் குமார் ஜெயின், டாக்டர் ஸ்ரீதரின் வாழ்க்கைப் பயணம்,  நம் அனைவருக்கும் ஒரு உத்வேகம் அளிக்க கூடியது என்றும் விவரித்தார்.இந்நிகழ்ச்சியில் பிரசார் பாரதியின் பொறியியல் பிரிவின்  தென் மண்டல  கூடுதல் தலைமை இயக்குநர் திருமதி வாசுகி, சென்னை ஆகாஷ்வாணி நிலையத் தலைவர் திரு இராமபத்ரம் வெங்கடேஷ், சென்னை ஆகாஷ்வாணி நிகழ்ச்சி பிரிவு தலைவர் திரு ஆர். சுதர்சன் ஆகியோர் கலந்துகொண்டனர். புதுடெல்லியின் ஊடகத் தொடர்பு அறக்கட்டளையின் டிஜிட்டல் ஊடக ஆலோசகர் திரு சுபோ செங்குப்தா, ஐஐஎம்சி-ன் முன்னாள் தலைமை இயக்குநர் பேராசிரியர் கே.ஜி. சுரேஷ், அட்சயம் வெளியீட்டின் திரு ஏ சந்திரசேகரன் ஆகியோர் இணையவழியில் பங்கேற்றனர்.

பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் ஆர். ஸ்ரீதரை மத்திய அமைச்சர் டாக்டர் எல். முருகன் கௌரவித்தார்; ‘இந்திய பொதுச் சேவை ஒளிபரப்பில் புதுமைகள்’ புத்தகத்தை சென்னையில் வெளியிட்டார்!

மத்திய தகவல் ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன், இன்று