பாரத மாதா நற்பணி அறக்கட்டளை வழங்கிய மருத்துவ நிதியுதவி
கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சார்பில் கோவை சிங்காநல்லூர் வசந்தாமில் மார்க்கெட் வீதியில் வசித்துவரும் .நந்தகுமார்(வயது-70)-பரிமளம் (வயது-65) குடும்பத்தார் கடந்த 20 -வருடங்களுக்கும் மேலாக வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு ஒரு மகன் -ஒருமகள் இருந்தார்கள்.மகன் சிறுவயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டார்.மகள் சுயமாக காதல் திருமணம் புரிந்து இவர்களை விட்டு போய்விட்டார்.நந்தகுமார் ஜயா அவர்கள் இதுவரைடீ மாஸ்டராக பணிபுரிந்து வந்தவர் இப்போது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு கால் விரல்கள் எடுக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டு வீட்டில் உள்ளார்..பரிமளம் அம்மா அவர்கள் வீட்டு வேலைகளுக்கு சென்று வந்தவர் தற்போது தனது கணவரை கவனிக்க வேண்டிய நிலையில் தற்போது வேலை இழந்து விட்டார். கடுமையான பொருளாதார சூழ்நிலையில் வாடகை வீட்டில் வசித்து வரும் இவர்கள் சூழ்நிலை அறிந்து(11-01-2025) அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் M.கெளரி சங்கர் அவர்கள் புத்தாடைகள், அரிசி , அத்தியாவசிய தேவையான மளிகைப் பொருட்கள், பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கியதுடன் மருத்துவ செலவினங்களுக்காக ரூபாய்.2000/- பணமாக வழங்கி உதவினார்கள்.இந்நிகழ்வில் பாரத மாதா சரவணன், ஷாஜுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் வயது முதிர்வில் உதவ வேண்டிய பிள்ளைகளை இழந்து ஆதரவின்றி வாழும் பெற்றோர் திருமிகு.நந்தகுமார்- பரிமளம் இறுதிவாழ்வு மலர பிரார்த்திப்போம்! உதவிக்கரம் நீட்டுவோம்!!

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு