புதுடெல்லி, வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக இங்கிலாந்தை சேர்ந்த பி.பி.சி. நிறுவனத்தின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடந்தது. கடந்த மாதம் 3 நாட்களாக இச்சோதனை நடத்தப்பட்டது.
குஜராத் கலவரம் தொடர்பாக பி.பி.சி. வெளியிட்ட ஆவணப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியதால், அதற்கு மத்திய அரசு தடை விதித்தது. அதைத்தொடர்ந்து இந்த சோதனை நடந்தது. இந்தநிலையில், ஜி 20 தொடர்பான நிகழ்ச்சிக்காக ஜி 20 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் டெல்லிக்கு வந்துள்ளனர்.
அதுபோல், இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லியும் வந்துள்ளார். அவர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார்.
அப்போது, பி.பி.சி. அலுவலக சோதனை குறித்து முறையிட்டார். அதற்கு ஜெய்சங்கர், ‘இந்தியாவில் இயங்கும் அனைத்து நிறுவனங்களும் உள்நாட்டு சட்டங்களுக்கும், ஒழுங்குமுறைகளுக்கும் முழுமையாக கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்’ என்று உறுதிபட கூறியதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு