ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் போட்டுகாடு கிராமம் உள்ளது. இங்கு தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மது பிரியர்கள் அதிகமானோர் இங்கு மது வாங்கி அருந்துவது வழக்கம். நேற்று கடை திறந்து வியாபாரம் மும்முரமாக நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது மது பாட்டில்கள் எடுக்க ஊழியர்கள் அங்குள்ள அறைக்குள் சென்றனர். அப்போது அங்கு சாரை பாம்பு ஒன்று இருந்தது.
இதை சற்றும் எதிர்பாராத ஊழியர்கள் மதுபாட்டில்களை எடுப்பதை நிறுத்திவிட்டு கடையில் இருந்து கூச்சல் போட்டபடி வெளியே ஓடி வந்துவிட்டனர். இதனால் மதுப்பிரியர்களுக்கு மது விற்பது தடைபட்டது. இதில் 3 மணி நேரம் மது பிரியர்கள் டாஸ்மாக் கடை முன்பு காத்திருந்தனர்.
இதனை அறிந்த ஏற்காடு தீயணைப்பு வீரர்கள் மதுபான கடைக்கு சென்று சுமார் 3 மணி நேரம் போராடி சாரை பாம்பை பிடித்து வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். இதன் பிறகே ஊழியர்கள் கடைக்குள் சென்று பணியில் ஈடுபட்டனர். பின்னர் மது பிரியர்கள் வரிசையாக நின்று மதுபானங்களை வாங்கி சென்றனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு