சென்னை, செப். 27:
இந்தியா முழுவதும் 10 லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கடந்த ஆண்டு அறிவித்தார். அதன்படி நாடு முழுவதும் நேற்று 9வது கட்டமாக 51 ஆயிரத்து 56 பேருக்கு ரோஸ்கர் மேளா திட் டத்தின் கீழ் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை ஆகிய மூன்று இடங்களில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. தபால் துறை, தகவல் தொடர்புத்துறை, வருவாய்த்துறை, நிதி சேவைகள் துறை, சுகாதாரத்துறை, நுகர்வோர் துறை, பொது கல்வி துறை உள்ளிட்ட துறைகளில் தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு, சென்னையில் 156 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
சென்னையில் 156 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. கோவையில் 158 பேருக்கும், மதுரையில் 229 பேருக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும்போது, இந்த வேலைவாய்ப்பு தேசிய அளவில் நடைபெறும் போட்டி தேர்வு அடிப்படையிலானது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்திய அரசில் ஒவ்வொரு துறையிலும் உள்ள காலியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ளோம். ரோஸ்கர் மேளா திட்டத்தின் ஓராண்டில் 10 லட்சம் பேருக்கு வேலை தர இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் முதல் தொடர்ச்சியாக இதைச் செய்து வருகிறோம். இப்போது நாட்டில் 51 ஆயிரம் பேருக்கு வேலை தருகிறோம்.
தமிழ்நாட்டில் 3 இடங்களில் இந்த நிகழ்வு நடந்தது. இதேபோல இந்தியா முழுக்க பல மாநிலங்களில் பல இடங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை தர நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த ரோஸ்கர் மேளா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 553 நபர்களுக்குப் பணி வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பணிநியமன ஆணையும் வழங்கப்பட்டது. இதில் பெரும்பாலும் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கே வேலை கிடைக்கிறது.
இங்கே நான் ஒரு உதாரணத்தை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். இந்த மேளாவில் உயர் அதிகாரிகள் தொடங்கி ஊழியர்கள் வரை அனைத்து பணிகளிலும் காலியிடங்கள் இருக்கிறது. அனைத்து பணியிடங்களை நிரப்பி வருகிறோம். இதில் கிளார்க், ப்யூன் உள்ளிட்ட பணிகளுக்கும் ஆட்களை எடுத்து வருகிறோம். இந்த பணிகளில் தமிழ்நாட்டில் ஒரு 100 இடங்கள் காலியாக இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு 300 பேர் விண்ணப்பித்திருந்தால் அவர்களில் 100 பேருக்கு வேலை கிடைக்கும். 300 பேர் விண்ணப்பிக்கவில்லை என்றால் குறைந்தது 200 அல்லது 150 பேர் விண்ணப்பித்தால் கூட பரவாயில்லை. ஆனால், 100 பேர் அல்லது அதற்குக் குறைவான நபர்கள் விண்ணப்பித்தால் அதில் தகுதியானவர்களுக்கு மட்டுமே பணி கிடைக்கும். மற்ற 30, 40 இடங்கள் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கே செல்லும்.
வங்கி போன்ற இடங்களில் மக்களுடன் தொடர்பு கொள்ளும் கிளார்க் போன்ற பணியிடங்களில் தமிழர்கள் இல்லை என்கிறார்கள். அது நியாயமான கோரிக்கை. ஆனால், அந்த பிரச்சினைக்கு இது தான் காரணம் அதைத்தான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மத்திய அரசுப் பணிகளுக்குத் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகமாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகம் விண்ணப்பித்தால் தான் தமிழர்களுக்கு அதிகம் வேலைவாய்ப்பு கிடைக்கும். அரசு வேலைகளில் கிடைக்கும் 60 பேருக்கு மட்டும் வேலை தந்துவிட்டு, மற்ற இடங்களை காலியாக வைக்க முடியாது. எனவே, மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களை அங்கு நியமிக்க வேண்டி இருக்கிறது.
அவர்களையும் அந்தந்த மாநில மொழிகளை கற்றுக் கொள்ளச் சொல்கிறோம். உள்ளூர் மொழியை கற்றுக் கொள்ள சில காலம் ஏற்படுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் தான் சேவையில் குறைபாடு ஏற்படுகிறது. ஏன் அதிக இடங்களில் தமிழர்களைப் பணி அமர்த்தவில்லை என்றால் தமிழர்கள் அதிகம் அப்ளை செய்வதில்லை. அதுவே கார ணம். எனவே, இங்கு நான் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் அரசு வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். அப்போது தான் தமிழகத்தில் இருக்கும் வேலைகள் முழுவதும் தமிழர்களுக்குக் கிடைக்கும். இது மட்டுமே காரணம் எனச் சொல்லவில்லை. இதுவும் ஒரு முக்கிய காரணம் என்றே சொல்கிறேன். இங்கிருப்பவர்கள் வெளி மாநிலத்திற்குச் சென்றாலும், அவர்கள் இங்கே வந்தாலும் பிரச்சினை தான். எனவே, தமிழர்களே அதிகம் விண்ணப்பிக்க வேண்டும்“ என்று அவர் தெரிவித்தார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு