முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம்

சென்னை:
நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் வரும் 18ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 5 நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு கூட்டத்தொடரில் பங்கேற்கும்படி எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், இந்த சிறப்பு கூட்டத்தொடர் எதற்காக கூட்டப்படுகிறது. கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல் குறித்து எதுவும் வெளியிடப்படவில்லை.
ஆனால், இந்த கூட்டத்தொடரில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்.பி.க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் காலை தொடங்கியது. இந்த கூட்டத்தில் மக்களவை, மாநிலங்களவை திமுக எம்.பி.க்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர்.
நாளை மறுதினம் தொடங்க உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்படுவது, கூட்டத்தொடரில் முன்வைக்க வேண்டிய கருத்துகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட