வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் – கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் அமலாக்கத்திற்கு உதவிடும் வகையில், மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட மண்டல அதிகாரிகளை நியமிக்க உள்ளது.
2026 ஜூலை 1-ம் தேதி முதல் இச்சட்டம் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு உதவிடும் வகையில் இந்த நியமனம் நடைபெறவுள்ளது. இந்த சட்டத்தை சுமூகமாக செயல்படுத்த ஏதுவாக இந்த மண்டல அதிகாரிகள் ஒருங்கிணைப்பாளர்களாகவும் வள அதிகாரிகளாகவும் செயல்படுவார்கள். மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் இச்சட்டத்தின் அமலாக்கம் அறிவுசார் அம்சங்களை பகிர்ந்து கொள்ளுதல், திறன் மேம்பாட்டை வலுப்படுத்துதல், சட்ட அமலாக்கத்தில் உள்ள சவால்களுக்கு தீர்வு காணும் நடைமுறைகளை ஊக்குவித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள இந்த நியமனம் வகை செய்கிறது.
இத்திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்வதற்காக அதிகாரிகளுக்கு ஊரக மேம்பாட்டுத் துறையின் சார்பில் சிறப்பு அறிமுகப் பயிற்சித்திட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சித் திட்டத்தில், இந்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்தும் தொழல்நுட்பம் சார்ந்த நிர்வாக அமைப்புகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. ஊரக மேம்பாட்டுத் துறையின் செயலாளர் திரு ரோஹித் கன்சால் தலைமையில், இந்தப் பயிற்சித் திட்டம் நடைபெற்றது.







