4 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: மத போதகருக்கு 4 தூக்கு தண்டனை

நெல்லை:
திருநெல்​வேலி மாவட்​டம், தேவர் குளத்தை அடுத்தமேல இலந்​தகுளம் பகு​தி​யைச் சேர்ந்​தவர் ஆபிர​காம் (53). கிறிஸ்தவ மத போதக​ரான இவர், அதே பகு​தி​யில் உள்ள கிறிஸ்தவ சபை​யில் பணி​யாற்றி வந்​தார். மேலும், தனது வீட்​டுக்​குச் சிறுமிகளை வரவழைத்​து, அவர்​களுக்​குப் பைபிள் வகுப்பு நடத்தி வந்​தார். வெளியூர்​களில் நடை​பெறும் சபை ஊழிய நிகழ்ச்​சிகளுக்​கு, அந்த சிறுமிகளை அழைத்​துச் சென்​றுள்​ளார்.
இந்​நிலை​யில், கடந்த 2022-ம் ஆண்டு பைபிள் வகுப்பு மற்​றும் ஊழிய நிகழ்ச்​சிகளுக்​காக அழைத்து செல்​லப்​பட்ட 12, 13 மற்​றும் 8 வயதுடைய ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த 3 சிறுமிகள் உட்பட மொத்​தம் 4 சிறுமிகளை தனது வீட்​டில் அடைத்து வைத்து ஆபிர​காம் பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக புகார் தெரிவிக்​கப்​பட்​டது.
பாதிக்​கப்​பட்ட சிறுமிகளின் தாய், திருநெல்​வேலி ஊரக மகளிர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். அதன் அடிப்​படை​யில், போக்சோ சட்​டத்​தின் கீழ் போலீசார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரித்து வந்​தனர். மாவட்ட கூடு​தல் காவல் கண்​காணிப்​பாளர் சண்​முகம் தலை​மை​யில், மகளிர் காவல் ஆய்​வாளர் ராதா உள்​ளிட்ட போலீசார் அடங்​கிய தனிப்​படை அமைக்​கப்​பட்​டு, விசா​ரணை தீவிரப்​படுத்​தப்​பட்​டது. விசா​ரணைக்​குப் பின் ஆபிர​காம் கைது செய்​யப்​பட்​டார்.
இந்த வழக்கு விசா​ரணை திருநெல்​வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்​றது. வழக்​கில் சாட்​சிகள் அனை​வரும் ஆஜர்​படுத்​தப்​பட்ட நிலை​யில், வழக்​கின் இறுதி விசா​ரணை நிறைவு பெற்​றது. இதையடுத்​து, இந்த வழக்​கில் நீதிபதி சுரேஷ்கு​மார் தீர்ப்பு வழங்​கி​னார்.
இதில், மத போதக​ராக​வும் சிறுமிகளின் தந்தை வயதுடைய​வ​ராக​வும் இருந்து கொண்​டு, சிறுமிகளுக்​குப் பாலியல் வன்​கொடுமை செய்து குற்​றம் இழைத்​துள்​ள​தால் கடுமை​யான தண்​டனை வழங்​கப்​படு​வ​தாக தமது தீர்ப்​பில் நீதிபதி குறிப்​பிட்​டார்.
நான்கு சிறுமிகளைப் பாலியல் வன்​கொடுமை செய்த குற்​றத்​துக்​காக ஆபிர​கா​முக்கு 4 தூக்கு தண்​டனை​யும் ரூ.52 ஆயிரம் அபராத​மும் விதித்து நீதிபதி தீர்ப்​பளித்​தார். மேலும், பாதிக்​கப்​பட்ட 4 சிறுமிகளுக்​கும் தலா ரூ.10 லட்​சம் இழப்​பீடு வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி உத்​தர​விட்​டுள்​ளார்.
இதுதொடர்பாக திருநெல்​வேலியைச் சேர்ந்த குற்​ற​வியல் வழக்​கறிஞர் கே.பிர​பாகரன் தெரிவிக்கையில், கொலை வழக்​கு​களில் இரட்டை ஆயுள், மூன்று ஆயுள் சிறை தண்​டனை​கள் வழங்​கப்​படு​வது போல், இந்த வழக்​கில் 4 மரண தண்​டனை​கள் விதிக்​கப்​பட்​டுள்​ளன. 4 சிறுமிகள் பாலியல் வன்​கொடுமைக்கு ஆளாக்​கப்​பட்​ட​தால், ஒவ்​வொரு சிறுமி​யின் பாதிப்​புக்​கும் ஒரு மரண தண்​டனை என்று கணக்​கிட்டு நீதிபதி இத்​தீர்ப்பை வழங்​கி​யுள்​ளார் என்றார்.

தி.நகர் பள்ளி மாணவர் சாவில் மர்மம்:மாணவர்கள் திடீர் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு; குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்த போலீசார்

சென்னை:சென்னை தி.நகர் பள்ளி மாணவன் இறந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் மீது

மின்மாற்றி கொள்முதலில் ரூ.397 கோடி முறைகேடு குற்றச்சாட்டு: முழு உண்மையை வெளிப்படுத்த வேல்முருகன் வலியுறுத்தல்

சென்னை:மின்​வாரி​யத்​தின் மின்​மாற்றி கொள்​முதலில் ரூ.397 கோடி அளவுக்கு முறை​கேடு நடந்ததாக எழுந்த குற்​றச்​சாட்​டின்

சவுதியில் கொல்லப்பட்ட தமிழக மீனவர் உடலை தமிழகம் கொண்டுவர நடவடிக்கை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சென்னை:சவுதியில் மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அதிமுக சார்பில்

முதல்வர் விஜய்க்கே தெரியாமலை சுற்றறிக்கை விடப்படுகிறதா? திமுக கேள்வி

சென்னை:முதல்வர் விஜய்க்கே தெரியாமல் சுற்றறிக்கைகள் வெளியிடப்படுகிறதா?’ என்று கேள்வி திமுக கேள்வி எழுப்பியுள்ளது.இது

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு: 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை:சென்னையில் டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு வழக்கு தொடர்பாகத் தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட