செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் டிவியில் முதல் மெய்நிகர் செய்தி வாசிப்பாளர் ‘லிசா’ அறிமுகம்…

புவனேஸ்வர்: ஒடிசா தனியார் தொலைக்காட்சி, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் உருவாக்கிய பெண் செய்தி வாசிப்பாளரை அறிமுகம் செய்துள்ளது. அதற்கு ‘லிசா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

கம்ப்யூட்டர், இன்டர்நெட் தாண்டி தற்போது உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. இந்த தொழில்நுட்பத்தில் கேட்கும் அனைத்து வகையான கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் சாட்ஜிபிடி அறிமுகமானது. அமெரிக்காவில் நீதிமன்றங்களில் வழக்குகளில் வாதாட ஏஐ ரோபோ வழக்கறிஞர்கள் கூட அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. அத்துடன் அனைத்துத் துறைகளிலும் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிக்கல்களை தீர்க்க ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் தனியார் தொலைக்காட்சி ‘ஓடிவி’, நாட்டிலேயே முதல் முறையாக மெய்நிகர் பெண் செய்தி வாசிப்பாளரை அறி முகம் செய்துள்ளது. இதற்கான விழா தலைநகர் புவனேஸ்வரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மெய்நிகர் பெண் செய்தி வாசிப்பாளர் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். அவருக்கு ‘லிசா’ என்று பெயரிட்டுள்ளனர். ‘ஓடிவி’ பிராந்திய அளவில் இலவச சேனலாக செயல்பட்டு வருகிறது. ‘லிசா’வை அறிமுகப்படுத்தி ஓடிவி நிர்வாக இயக்குநர் ஜகி மன்கட் பாண்டா கூறியதாவது:

தொலைக்காட்சியில் லிசாதான் முதல் பெண் மெய்நிகர் செய்திவாசிப்பாளர். ஒரு காலத்தில் கம்ப்யூட்டர் என்பதே ஆச்சரியப்படும் விஷயமாக இருந்தது. அதன்பிறகு காலம் மாறி தற்போது இன்டர்நெட் ஆதிக்கம் செலுத்துகிறது. இன்டர்நெட்டில் மக்கள் அதிக நேரம் செலவிடுகின்றனர். இதுபோன்ற மாற்றங்களை கருத்தில் கொண்டு ‘ஓடிவி’ சேனல் முதல் முறையாக பெண் மெய்நிகர் செய்தி வாசிப்பாளர் லிசாவை அறிமுகம் செய்துள்ளோம். நாங்கள் ஒடிசாவில் கடந்த 1997-ம் ஆண்டு தொலைக்காட்சி சேனல் தொடங்கும்போது அதன் இலக்கில் தெளிவாக இருந்தோம். அதன்பிறகு 26 ஆண்டுகளாக முதல் இடத்தில் இருக்கிறோம். இப்போது இன்னொரு மைல்கல்லை எட்டியிருக்கிறோம். லிசாவை அறிமுகம் செய்ததன் மூலம், தொலைக்காட்சி ஒளிபரப்பில் மேலும் பல மைல்கற்களை எட்ட முடியும்.

தற்போது எங்கள் தொலைக்காட்சி பார்வையாளர்கள் மாறி உள்ளனர். அதிகபட்சமான செய்திகளை வழங்குவதில் அவர்களுக்கு ஆர்வம் இல்லை. சில செய்திகளில் வேறு பரிமாணத்தை அல்லது கேள்விகளுக்கான பதில்களை அவர்கள் எதிர்பார்க்கின்றனர். அந்த கோணத்தில் அவர்களது விருப்பத்தை நிறைவு செய்யும் வகையில் தற்போது ஓடிவி தொலைக்காட்சியில் லிசா அறிமுகமாகி இருக்கிறார். இதற்கு செயற்கை நுண்ணறிவு பல வழிகளில் எங்களுக்கு உதவியாக இருக்கிறது. இவ்வாறு ஜகி மன்கட் பாண்டா கூறினார்.

ஒடியா, ஆங்கிலத்தில் பேசும்: ஓடிவி.யின் டிஜிட்டல் வர்த்தக தலைவர் லிடிஷா மன்கட் பாண்டா கூறும்போது, ‘‘லிசா அறிமுகம் எங்களுக்கு புதுவித அனுபவம். கூகுள் கூட ஒடியா மொழியை ஆங்கிலத்தில் சரியாக மொழிபெயர்த்து வழங்குவதில்லை. எங்கள் குழு தீவிர முயற்சி செய்து லிசாவை கொண்டு வந்துள்ளோம். உங்களைப் போல ஒடியா மொழியை லிசா சரளமாக பேச முடியாவிட்டாலும், கூகுளைவிட சிறப்பாக பேசும்’’ என்றார். ஓடிவி.யில் அறிமுகமாகி இருக்கும் லிசா, பல மொழிகளையும் பேசும்திறன் படைத்தது. எனினும் முதல் கட்டமாக ஒடியா மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் பேசும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65