1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. அடக்கமுடைமை
செருக்கில்லாமலும் எல்லை கடவாமலும் மனம் மொழி
மெய்களால் அடங்கி நடத்தல்
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனின் ஊஉங்கு இல்லை உயிர்க்கு.
அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு பேணிக் காக்க வேண்டும். ஏனெனில் மக்களுக்கு அந்த அடக்கத்தைவிடச் சிறந்த ஆக்கம் வேறு எதுவும் இல்லை.







