தமிழகத்தில் “எனது மண் எனது தேசம்” இயக்கம் செயல்திட்டம்: நேரு யுவ கேந்திரா ஏற்பாடு

சென்னை:
மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகள் மற்றும் பஞ்சாயத்துராஜ் அமைப்புகளுடன் இணைந்து மத்திய அரசின் இளைஞர் நல அமைச்சகத்தின் சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவின் உச்சகட்ட நிகழ்வாகக் கருதப்படுவது “எனது மண், எனது தேசம்” என்ற மாபெரும் இயக்கம். இது தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக 75 மரக்கன்றுகள் நடுதல், ஐந்து உறுதிமொழிகள் ஏற்றல், சுதந்திரப் போராட்ட வீரர்கள், சேவையில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை கௌரவித்தல், தேசியக்கொடி ஏற்றுதல், தேசிய கீதம் பாடுதல் போன்ற பன்முக நடவடிக்கைகள் நகர்ப்புற மற்றும் கிராம பஞ்சாயத்து நிலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கிராம ஊராட்சி அளவிலான நிகழ்வுகள் வருகிற 15ம் தேதி வரை நடக்கிறது.
இந்த இயக்கத்தின் தொடர்ச்சியாக, அனைத்து வட்டாரங்களிலிருந்தும் மண் சேகரிக்கப்பட்டு தேசிய தலைநகருக்குக் கொண்டு செல்லப்படும். இது வருகிற 27ம் தேதி முதல் 30 வரை புதுதில்லியில் உள்ள கடமைப் பாதையில் நடைபெறும். நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் சேகரிக்கப்பட்ட மண், அம்ரித் வாடிகா (அமிர்தத் தோட்டம்) என்ற தனித்துவமான தோட்டத்தை உருவாக்கப் பயன்படுத்தப்படும்.
சென்னையில் உள்ள நேரு யுவ கேந்திரா அமைப்பு எனது மண், எனது தேசம் என்ற நிகழ்வை அடையாறு அரசு இளைஞர் விடுதியில் நடத்தியது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நேரு யுவ கேந்திரா அமைப்பின் மாநில இயக்குநர் கே.குன்ஹமீத் தலைமை விருந்தினராகக் காலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் இ.பி.ராவ், ஓய்வுபெற்ற குரூப் கேப்டன் ஏ.ஆர்.ஜெயக்குமார், நாட்டு நலப்பணித் திட்ட மண்டல இயக்குநர் சாயீராம், நேரு யுவ கேந்திரா அமைப்பின் துணை இயக்குநர் சம்பத்குமார், வார்டு உறுப்பினர் சுபாஷினி துரை ஆகியோரும் உரையாற்றினர்.
இளைஞர் விடுதிகளின் வளாகங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. சேவையில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரிகள் சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டப் பிரிவு சார்பில் எனது மண், எனது தேசம் இயக்கத்தின் ஒரு பகுதியாக உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டையில், புனித அடைக்கல அன்னை இளையோர் நற்பணி மன்றத்துடன் இணைந்து தெற்குச் செட்டியப்பட்டியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை என்.ஒய்.கே.எஸ். நடத்தியது. ஐந்து உறுதிமொழிகள் ஏற்கப்பட்டன. புதுக்கோட்டையில் உள்ள படைவீரர்கள் நலவாரியத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்