நீதிமன்றத்தின் தீர்ப்பு நீதிக்கும் தர்மத்திற்கும் கிடைத்த வெற்றி: எடப்பாடி பழனிசாமி பேட்டி…

இடைப்பாடி: அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நீதிக்கும், தர்மத்திற்கும் கிடைத்த வெற்றி என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லும் என்று உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகேயுள்ள சிலுவம்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் அதிமுக நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு நீதிமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த தீர்ப்பு நீதிக்கும், தர்மத்திற்கும், உண்மைக்கும் கிடைத்த வெற்றி. அதிமுக ஒன்றாகத்தான் இருக்கிறது என்று மாநாட்டின் மூலம் நிரூபித்து காட்டியுள்ளோம். சந்திரயான் 3 நிலவில் தரை இறங்கியது நாட்டிற்கு கிடைத்த வெற்றி. தமிழக விஞ்ஞானிகள், மற்ற நாட்டை சேர்ந்தவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல‌ என நிரூபணம் ஆகி உள்ளது. இது இந்தியா வல்லரசு நாடாக உயர்வதற்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களில், ஒரு சிலரை தவிர்த்து, கட்சிக்காக உழைத்தவர்கள் மீண்டும் வர நினைத்தால் இணைத்துக் கொள்வோம். வேறு கட்சியுடன் சேர்ந்து, அதிமுகவை கெடுக்க நினைத்தவர்கள், அழிக்க நினைத்தவர்கள், எட்டப்பராக செயல்பட்டவர்களுக்கு கட்சியில் இடம் இல்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும், 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

*கொடநாடு கொள்ளை விவகாரம் ஊடகங்களை மிரட்டிய எடப்பாடி
எடப்பாடி பழனிசாமி கூறுகையில், ‘கொடநாடு வழக்கில் என்னை சம்பந்தப்படுத்தி பேசுவது தவறான விஷயம். சாலையில் செல்பவர்களை எல்லாம் அழைத்து வைத்துக்கொண்டு ஊடகம் கேள்வி கேட்பது தவறு. தனபால் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர். நிலஅபகரிப்பில் குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, ஜாமீனில் வந்தவர். கனகராஜை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் என்று இனி யாரும் சொல்லக்கூடாது. அவர் சசிகலாவின் கார் ஓட்டுநராக இருந்தவர். இனிமேல், கனகராஜை ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் என கூறினால், நீதிமன்றத்தின் வழியாக வழக்கு தொடர்வோம்.

அவர் ஒருநாள் கூட ஜெயலலிதாவுக்கு ஓட்டுனராக இருந்தது இல்லை. ஒரு குற்றவாளியை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கார் ஓட்டுநராக இருந்தார் என்று கூறுவது தவறு. கொடநாடு வழக்கு நீதிமன்றத்தில் சட்டரீதியாக நடைபெற்று வருகிறது. அதைப்பற்றி பேசுவதே தவறு. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது, அதை பற்றி பேசுவது வழக்கிற்கு குந்தகம் விளைவித்து விடும்’ என்றார். கனகராஜை ஜெயலலிதாவின் டிரைவர் என சொல்லக்கூடாது என சொல்லும் எடப்பாடி பழனிசாமி, அவர் முதல்வராக இருந்த காலத்தில்தான் ஜெயலலிதாவின் டிரைவர் கனகராஜ் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத