கன்னியாகுமரியில் உள்ள அரசுப் பள்ளிகளில் அடல் டிங்கரிங் ஆய்வக பயிலரங்கம் நடைபெற்றது…

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த விளவங்கோடு, கல்குளம், ராஜாக்கமங்கலம், திருவிதாங்கோடு அரசு மேல்நிலை பள்ளிகளில் 2023 ஆகஸ்ட் 28, 30 ஆகிய நாட்களில் அடல் டிங்கரிங் ஆய்வக தத்தெடுப்பு மற்றும் வழிகாட்டுதலின் ஒரு பகுதியாக, சிஎஸ்ஐஆர்-கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம், சென்னை (சிஎஸ்ஐஆர்-எஸ்இஆர்சி) மற்றும் சிஎஸ்ஐஆர் சென்னை வளாகம் (சிஎம்சி) இணைந்து ஜிக்யாசா ஏடிஎல் பயிலரங்கத்தை ஏற்பாடு செய்தன.

பயிலரங்கின் போது அறிவியல் விரிவுரைகள் மற்றும் நேரடி விளக்க அமர்வுகள் நடத்தப்பட்டன.

இந்நிகழ்ச்சியின் போது,
எஸ். மகேஸ்வரன், மூத்த முதன்மை விஞ்ஞானி, சிஎஸ்ஐஆர் – எஸ்இஆர்சி
ஏ. ராபர்ட் சாம், மூத்த முதன்மை விஞ்ஞானி, சிஎம்சி– சிஎஸ்ஐஓ
டி. கல்பனா, மூத்த முதன்மை விஞ்ஞானி, சிஎம்சி – சிஇசிஆர்ஐ
ஏ.கே. ஃபர்வேஸ் அகமது, முதன்மை விஞ்ஞானி, சிஎஸ்ஐஆர் – எஸ்இஆர்சி
எம்.சரவணன், மூத்த விஞ்ஞானி, சிஎஸ்ஐஆர் – எஸ்இஆர்சி
ஜே.பிரவின், மூத்த விஞ்ஞானி, சிஎஸ்ஐஆர் – எஸ்இஆர்சி
இ. அசோக்குமார், விஞ்ஞானி, சிஎஸ்ஐஆர் – எஸ்இஆர்சி
ஆர்.டி. சதீஷ் குமார், முதன்மை தொழில்நுட்ப அதிகாரி, சிஎஸ்ஐஆர் – எஸ்இஆர்சி (CSIR-SERC), ஆகியோர் வரிவுரைகளும் நேரடிப் பயிற்சியும் வழங்கினர். இந்நிகழ்வில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்களும், 30-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பங்கேற்றனர். முழு நிகழ்வும் எஸ். மகேஸ்வரன் மற்றும் இ.அசோக்குமார் ஆகியோரால் ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.