குரூப் 4 டிஎன்பிஎஸ்சி தேர்வு – முக்கிய அறிவிப்பு..

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப, குரூப் 1 முதல் குரூப் 8 வரையிலான தேர்வுகளும், இதர துறை சார்ந்த தேர்வுகளையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆன டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு ஆண்டுதோறும் குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஒரே தேர்வாக நடத்தப்பட்டு, நேர்காணல் எதுவும் இல்லாமல் தேர்வாகும் அரசுப் பணி என்பதால், இந்தத் தேர்வுக்கு தேர்வர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, லட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கக்கூடிய குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 1 பதவிகளில் காலியாக இருக்கும் 32 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனவே அதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த பணியிடத்துக்கான முதல் நிலை தேர்வு வருகிற நவம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதத்தில் 384 ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் பணியிடங்களுக்கும், அடுத்த மாதத்தில் (அக்டோபர்) 400 தொழில்நுட்ப பணியிடங்களுக்கும் என 13 வகையான துறை சார்ந்த காலி பணியிடங்களுக்கும் அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.