2400 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை – கேரளாவில் இருந்து வந்தவர்கள்

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேரள மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. கேரளாவையொட்டி உள்ள தமிழகத்திலும் காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள 5 சோதனை சாவடிகளிலும் போலீசாருடன் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். கேரளாவில் இருந்து வருபவர்கள் காய்ச்சல் பரிசோதனைக்கு பிறகு குமரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த 3 நாட்களாக காய்ச்சல் பரிசோதனை இந்த எல்லை பகுதியில் நடைபெற்று வருகிறது. இன்று காலையில் 3-வது நாளாக சோதனை நீடித்தது. இதுவரை கேரளாவில் இருந்து வந்த 2400 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை மேற் செய்யப்பட்டுள்ளது.

தெர்மல் ஸ்கேனர் கருவி மூலமாக சுகாதார பணியாளர்கள் காய்ச்சல் பரிசோதனை செய்கிறார்கள். இதில் 3 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததையடுத்து அந்த 3 பேரையும் சுகாதார துறை அதிகாரிகள் மீண்டும் கேரளாவுக்கு திருப்பி அனுப்பினர். தொடர்ந்து காய்ச்சல் பரிசோதனை நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். நாகர்கோவில் மாநகர பகுதியில் களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டு உள்ளனர். வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி உள்ளதா? கொசு உற்பத்தி உள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு உள்ளனர். மேலும் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மாநகர பகுதியில் வழக்கத்தை விட தற்போது காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள் காய்ச்சல் பாதித்தவர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்து வருகிறார்கள். குமரி மாவட்டம் முழுவதும் வழக்கமாக 30 முதல் 35 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் தினசரி பாதிப்பு 40 முதல் 50 ஆக அதிகரித்துள்ளது. ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி, பத்மநாபபுரம் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு தனிவார்டு அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65