சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா சட்டப்பேரவைகளுக்கான பொதுத் தேர்தல்- 2023 அட்டவணை வெளியீடு

சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்குப் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான கால அட்டவணையைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. பருவநிலை, கல்வி மற்றும் தேர்வு நடைமுறைகள், முக்கிய திருவிழாக்கள், சட்டம் ஒழுங்கு நிலைமை, மத்திய ஆயுத காவல் படைகளின் இருப்பு போன்ற அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு தேர்தல் கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன் படி சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் முதல் கட்டமாக 20 தொகுதிகளில் நவம்பர் 7-ம் தேதியும், 2-ம் கட்டமாக 70 தொகுதிகளில் நவம்பர்17-ம் தேதியும் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டத் தேர்தல் நடைபெறும் 20 தொகுதிகளில் அக்டோபர் 13ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. மனுக்களை தாக்கல் செய்ய 20ம் தேதி கடைசி நாளாகும். மனுக்கள் அக்டோபர் 21-ம் தேதி பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற அக்டோபர் 23-ம் தேதி கடைசி நாளாகும்.

சத்தீஸ்கர் இரண்டாம் கட்டத்தேர்தல் நடைபெறும் 70 தொகுதிகளில் அக்டோபர் 21-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. மனுக்களை தாக்கல் செய்ய 30-ம் தேதி கடைசி நாளாகும். மனுக்கள் அக்டோபர் 31-ம் தேதி பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற நவம்பர் 2-ம் தேதி கடைசி நாளாகும்.

மிசோரம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளுக்கும் நவம்பர் 7-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் அக்டோபர் 13-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. மனுக்களை தாக்கல் செய்ய 20ம் தேதி கடைசி நாளாகும். மனுக்கள் அக்டோபர் 21-ம் தேதி பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற அக்டோபர் 23-ம் தேதி கடைசி நாளாகும்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் அனைத்து 230 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 17-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் அக்டோபர் 21-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. மனுக்களை தாக்கல் செய்ய 30-ம் தேதி கடைசி நாளாகும். மனுக்கள் அக்டோபர் 31-ம் தேதி பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற நவம்பர் 2-ம் தேதி கடைசி நாளாகும்.

ராஜஸ்தானில் அனைத்து 200 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 23-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் அக்டோபர் 30-ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது. மனுக்களை தாக்கல் செய்ய நவம்பர் 6-ம் தேதி கடைசி நாளாகும். மனுக்கள் நவம்பர் 7-ம் தேதி பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற நவம்பர் 9-ம் தேதி கடைசி நாளாகும்.

தெலங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 30-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் நவம்பர் 3-ம் தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது. மனுக்களை தாக்கல் செய்ய நவம்பர் 10-ம் தேதி கடைசி நாளாகும். மனுக்கள் நவம்பர் 13-ம் தேதி பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற நவம்பர் 15-ம் தேதி கடைசி நாளாகும்.

5 மாநிலங்களிலும் டிசம்பர் 3-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். டிசம்பர் 5-ம் தேதிக்குள் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டதையடுத்து 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65